உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்மாதிரி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

7 ல் 3 நாள்

மாபெரும் வைத்தியனாகிய இயேசு

நற்செய்தி நூல்களில் இயேசுவின் குணமாக்கும் அருட்பணியிலிருந்து நாம் சில உணர்வுப்பூர்வமான தகவல்களைக் காணலாம்.

அவர் மக்களுக்கு தற்காலிகமான சுகத்தைக் கொடுக்கவில்லை. அவர் அந்த மக்களை நித்தியத்துக்குமாக மாற்றிவிட்டார்! பிசாசுகளின் உலகத்தின் மேல் அவர் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருந்தார். பிசாசுகளின் ஒப்புதலையோ, புகழ்ச்சியையோ ஒரு போதும் அவர் அனுமதிக்கவில்லை. வியாதியுடன் இருந்தவர்கள் மீது அவர் உண்மையான மனதுருக்கம் உள்ளவராக அவர்களை குணமாக்கினார்.

வியாதியும் துன்பமும் உள்ளவர்கள் மீது இயேசுவுக்கு இருந்த மனதுருக்கமானது அவரது சுபாவத்தில் இருந்து வந்தது. அனைத்து உயிர்களையும் படைத்தவராக, தான் படைத்த மக்கள் ஆரோக்கியமும் முழுமையும் பெற வேண்டும் என்று விரும்பினார். இயேசு மக்களை நித்தியத்துக்காக மீட்பதற்காக வந்தார் என்றாலும் இந்த உலகத்தில் அவர்கள் முழுமையான வாய்ப்புக்களுடன் வாழ வேண்டும் என்று விரும்பினார். படைத்தவரின் விருப்பமானது தனது படைப்புகள் சீராக்கப்பட்டு, இறைவனின் அரசு இந்த உலகத்தில் வருவதற்கு அவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

மனித உருவத்தில் இருந்த இறைவனாகிய இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இருந்தார். அத்துடன் தொடர்ந்து இறைவனின் ஆற்றல் அவர் மூலமாக வெளிப்படும்படியாக இருந்தார். இந்த ஆற்றல் வெளியிடப்படும்போது, சுகவீனமானவர்களுக்குக் குணம் கிடைத்தது. உடைந்தவர்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டார்கள், அடிமைப்பட்டவர்கள் விடுதலையடைந்தார்கள். அவர் உண்மையிலேயே மாபெரும் வைத்திராக இருந்தார்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.christinegershom.com/