உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்மாதிரி
காயப்பட்ட கிறிஸ்து அனைத்து காயத்தையும் குணமாக்குகிறார்
சிலுவையில் அவர் முடிந்த செயலின் மூலமாக நமது குணமாகுதல் ஏற்கனவே நமக்கு என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. குணமாகுதலைநமக்கு என்று சுதந்தரித்துக் கொள்வது கடினமாக இருப்பதற்குத் காரணம், நமக்கு முன்பாக எதிரியால் வைக்கப்பட்டிருக்கும் தடைகளும் வலைகளும் தான். துவக்கத்தில் இருந்தே பிசாசு மனிதனின் புத்திக்கும் உடலுக்கும் ஆவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.தனிப்பட்ட நபர்கள் பாவத்திலும் தரித்திரத்திலும் கட்டப்பட்டு வைப்பதற்காக ஆழமான காயங்களை உருவாக்கியிருக்கிறான். இறைவனின் மகன் உலகத்தில் வந்ததற்குக் காரணமே பிசாசின் செயல்களை அழிப்பதற்காகத் தான் (1 யோவான் 3:8)
மனிதர்களில் இருக்கும் காயங்கள் ஆறுவதற்கு ஐந்து அவசியமான படிகள் இருக்கின்றன. சமீப காலங்களில் சில வியாதியஸ்தர்களில் முழுமையடையாத அரைகுறை சுகமாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்ற தகவல் நமக்கு அச்சத்தைக் கொடுக்கின்றது. இரத்தத்தில் போதிய அளவு பிராண வாயு காயங்களுக்குச் செல்லாதது தான் இதற்குக் காரணம் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இரத்தத்தால் சுமந்து செல்லப்படும் பிராண வாயு தான் முழுமையான சுகமாகுதலுக்கு முக்கியமாகத் தேவையாக இருக்கின்றது.
இதுவே இன்று நமது உணர்வுகளுக்கும் ஆன்மிகத்துக்கும் தேவையானதாக இருக்கின்றது என்று நான் நம்புகிறேன். நம் வாழ்க்கையில் இயேசுவின் இரத்தத்தை சுதந்தரிக்காமல் அது நம்மை சுற்றிப் பாதுகாக்கும்படி கேட்காமல் நமது ஆழமான காயங்களுக்கான குணமாகுதலை நாம் கண்டு கொள்ள முடியாது.
சுகமாகாத உள்ளான காயங்களால் ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் அவை நம்மை பயத்திலும், வெறுப்பிலும், கசப்பிலும், மன்னிக்காத தன்மையிலும், பெருமையிலும், துயரத்திலும் வைத்திருக்கும் என்பது தான். ஏதாவது காரணம் கூட நம்மைத் தூண்டிவிடக்கூடும். நமக்குக் காரணம் என்னவென்றே தெரியாமல் இருக்கும். குணமாகாத உள்ளான காயங்களின் அடர்த்தியால் நம்மை நேசிப்பவர்களையும் நெருக்கமாக இருப்பவர்களையும் காயப்படுத்தி ஒதுக்கித் தள்ளவும் செய்வோம்.
நாம் முழுமையாக வாழ வேண்டும் என்றால் ஆழமாக குணமாக்கப்பட்டிருக்க்க வேண்டும்!
இயேசுவின் இரத்தமானது அதைச் செய்ய நமக்கு உதவுகிறது. ஏனென்றால் அது சாத்தானின் மீது வெற்றியைக் கொடுக்கிறது. இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டபோது அவரது உடலில் திறந்து கொண்ட ஒவ்வொரு காயமும் நமக்கு வந்திருக்க வேண்டிய, வரக்கூடிய, வந்திருக்கின்ற காயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அந்தக் காயங்களிலிருந்தும் ஆணிகளால் கடாவப்பட்ட கரங்களிலும் விலாவிலுள்ள காயத்திலும் இருந்துவடிந்த இரத்தமானது பரிபூரணமான பலிக்கான ஆட்டுக் குட்டியின் பரிபூரணமான இரத்தமாக இருக்கிறது. இந்த இரத்தமானது மனுக்குலத்தின் இறந்த கால, நிகழ்கால, எதிர்கால பாவங்களை நிவிர்த்தி செய்யவே சிந்தப்பட்டது. கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தமானது நம்மைப் பாவத்தின் அபராதத்தில் இருந்து நம்மை விடுவித்துக் காப்பாற்றுகிறது. இது நம்மைக் கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமுள்ளவர்களாக நிறுத்தி அவருடன் நேரடியாக அணுகும் வாய்ப்பை இன்று கொடுக்கிறது. இந்த இரத்தமானது நமது மனதை குற்ற உணர்ச்சியிலிருந்தும் அவமானத்தில் இருந்தும் கழுவி தங்கள் விசுவாசத்தைக் கிறிஸ்துவின் மேல் வைக்கும் அனைத்து நபர்களுடனும் நம்மை இணைக்கிறது.
“அவரது தழும்புகளால் குணமாகிறோம்” என்று நாம் சொல்லும்போது, நாம் உண்மையிலேயே இதைத் தான் சொல்கிறோம், “நமது ஒவ்வொரு காயத்துக்குமான குணமாக்குதலானது அவரது உடலில் இருந்த காயங்களில் இருந்து வழிந்த இரத்தத்தில் இருந்து காணப்படுகிறது.” இயேசுவின் இரத்தத்தை ஜெபத்தாலும் விசுவாசத்தாலும் நம் வாழ்வின் ஒவ்வொரு காயத்திலும் பூச வேண்டிய காலம் இதுவே. இது ஒரு சடங்காச்சாரமோ, மந்திரமோ அல்ல. இது ஒரு போராடம் ஆகும். நாம் அனைவருமே எதிரியுடனான ஒரு பெரும் யுத்தத்தில் இருக்கிறோம்! நாம் காயப்பட்டவர்களாக, தோற்றவர்களாக வாழ்வதைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஜெபத்தாலும் விசுவாசத்தாலும் உந்தப்பட்டு ஆற்றல் கொடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்வதைத் தேர்ந்தெடுக்கலாம். இயேசு சிலுவையில் பெற்ற வெற்றியில் விசுவாசம் வைக்கலாம். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதிலும் அந்த வெற்றியானது வெளிப்படுபடியான தொடர்ச்சியான ஜெபத்தில் வாழலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்
More
இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.christinegershom.com/