பலன்மாதிரி

பலன்

5 ல் 1 நாள்

தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 10:41‭-‬42

ஒவ்வொரு கிறிஸ்தவரும் சபைக்கு,ஊழியருக்கு, ஊழியங்களுக்கு, விசுவாச குடும்பங்களுக்கு,ஏழை எளியவருக்கு கொடுக்கும்படி வேதாகமம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது .

நாம் சபைக்கு செல்லும்போது காணிக்கை கொடுக்கிறோம். அவைகள் ஊழியங்களுக்கும், ஊழியர்களுக்கும் பயன்படுகின்றன.ஆனால் தேவன் அவைகளை தனக்கு கொடுப்பதாக கருதுகிறார். மேலும், ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்( நீதி 19:17) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். இவ்வாறு நாம் கொடுக்கும் போது அதன் பலனை நாம் பெற்றுக் கொள்கிறோம்.

மேலும்,கொடுத்தல் என்பது பணம் மட்டுமே அல்லாமல் பொருள், உதவி,உணவு, நேரம், உற்சாகமூட்டும் நல்வார்த்தை போன்றவைகளும் உள்ளடங்கும்.

மேற்கோள் காட்டிய வசனங்களில், "ஒரு கலசம் தண்ணீர்' கொடுத்தாலும் பலன் கிடைக்கும் என்று வாசிக்கிறோம். ஆகவே, 'எனக்கு கொடுப்பதற்கு திராணி இல்லை' என்று போக்கு சொல்வதற்கு ஒருவருக்கும் இடமே இல்லை!

நம் தியானத்தில்,சூனேம் நகரில் கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ எலியா தீர்க்கதரிசிக்கு செய்த உபகாரங்களால் அவளுக்கு கிடைத்த 4 பலன்களை நாம் பார்க்கலாம் (2 இரா 4:8-37;8:1-6).

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

பலன்

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்!( லூக்கா 6:38) இதுதான் கொடுப்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் வாக்குறுதி. மேற்கோள் காட்டிய வசனம் போலவே இன்னும் அநேக வாக்குத்தத்தங்கள் முழு வேதாகமத்திலும் உண்டு. சிலர்,தான் புகழப்படுவதற்காகவும், தன் பேர் பெருமைக்காகவும், கொடுப்பதுண்டு. ஏன் போட்டியின் நிமித்தம் கொடுப்பவர்களும் உண்டு. மற்றும் சிலர், கொடுத்தால் தேவன் பலன் கொடுப்பார் என்று பலனை எதிர்பார்த்தே கொடுப்பார்கள். ஆனால் கொடுப்பதின் நோக்கம் இரக்கத்தின் நிமித்தமாகவும், அன்பினால் ஊந்தப்பட்டும்,தேவனை கனப்படுத்தும்படியாகவும் கொடுக்க வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/