பலன்மாதிரி

பலன்

5 ல் 4 நாள்

பலன் 3: தீங்கு நாட்களில் தப்புவிக்கப்படுதல்

எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழு வருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான். அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில்போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.

2 இராஜாக்கள் 8:1‭-‬2

ஏழு வருஷம் தேசத்தில் பஞ்சம் இருக்கும் என்று முன்னறிவித்த தீர்க்கதரிசி எலிசா ,தனக்கு தயவு செய்த சூனேம் ஸ்திரீயின் குடும்பத்திற்கு தத்தளிப்பு வரக்கூடாது என்று எண்ணி புற தேசத்திற்கு போகும்படி எச்சரித்தார். அவளும் கீழ்ப்படிந்து சென்றாள்.

ஆம்.எலிசாவும் கேயாசியும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் திருப்தியாய் போஜனம் கொடுத்து ஆசையாய் உணவை பரிமாறின குடும்பத்திற்கு ஆகாரக் குறைவு வரக்கூடாது என்று எலிசா அவள் பாராட்டின நன்மைக்கு பதில் நன்மை செய்தார். அவள் குடும்பத்தினரும் பஞ்சத்தை அனுபவிக்காமல் காக்கப்பட்டனர்.

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் -

நீதிமொழிகள் 11:25

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

பலன்

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்!( லூக்கா 6:38) இதுதான் கொடுப்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் வாக்குறுதி. மேற்கோள் காட்டிய வசனம் போலவே இன்னும் அநேக வாக்குத்தத்தங்கள் முழு வேதாகமத்திலும் உண்டு. சிலர்,தான் புகழப்படுவதற்காகவும், தன் பேர் பெருமைக்காகவும், கொடுப்பதுண்டு. ஏன் போட்டியின் நிமித்தம் கொடுப்பவர்களும் உண்டு. மற்றும் சிலர், கொடுத்தால் தேவன் பலன் கொடுப்பார் என்று பலனை எதிர்பார்த்தே கொடுப்பார்கள். ஆனால் கொடுப்பதின் நோக்கம் இரக்கத்தின் நிமித்தமாகவும், அன்பினால் ஊந்தப்பட்டும்,தேவனை கனப்படுத்தும்படியாகவும் கொடுக்க வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/