பலன்மாதிரி

பலன்

5 ல் 3 நாள்

பலன் 2: சுகம்( இறந்த மகன் உயிரோடு எழும்புதல்)

தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான். அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.

2 இராஜாக்கள் 4:19‭-‬20,37

தீர்க்கதரிசியின் வாக்குப்படி சூனேம் ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தது.சில ஆண்டுகளில் அந்த பிள்ளைக்கு திடீரென்று தலைவலி வந்து இறந்து போனது.

யாரிடமும் சொல்லாமல் எப்படியாவது இவனை திரும்ப உயிரோடு எழுப்பிவிடலாம் என்ற விசுவாசத்தோடு எலிசா கட்டிலின் மேல் சடலத்தை வைத்து அறைவீட்டை பூட்டி விட்டு அவன் பிராணனுக்காக எலிசாவிடம் போய் கதறினாள். அவர் தன்னோடு வீட்டிற்கு வரும் வரை அவரை விடவே இல்லை.

எலிசா, தேவன் ஒருவரே ஜீவனை கொடுக்கிறவர் என்று அறிந்ததினால் தேவனை நோக்கி வேண்டுதல் செய்தார்.பிள்ளை உயிரோடு வந்தது.

எபிரேயர் 6:10 இப்படியாக சொல்கிறது,

ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

அவள் தொடர்ந்து செய்த நன்மைகளை மறக்காமல் அதின் பலனை கொடுத்துக் கொண்டே இருந்தார். நீங்கள் செய்த, செய்கிற,செய்யப் போகிற கிரியைகளையும் அவர் அவ்வாறே நினைவு கூர்ந்து ஆபத்து நாளில் உங்கள் தேவை எதுவோ அவைகளை பூர்த்தி செய்வார். மறந்து போவதற்கு அவர் மனுஷன் அல்ல!

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

பலன்

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்!( லூக்கா 6:38) இதுதான் கொடுப்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் வாக்குறுதி. மேற்கோள் காட்டிய வசனம் போலவே இன்னும் அநேக வாக்குத்தத்தங்கள் முழு வேதாகமத்திலும் உண்டு. சிலர்,தான் புகழப்படுவதற்காகவும், தன் பேர் பெருமைக்காகவும், கொடுப்பதுண்டு. ஏன் போட்டியின் நிமித்தம் கொடுப்பவர்களும் உண்டு. மற்றும் சிலர், கொடுத்தால் தேவன் பலன் கொடுப்பார் என்று பலனை எதிர்பார்த்தே கொடுப்பார்கள். ஆனால் கொடுப்பதின் நோக்கம் இரக்கத்தின் நிமித்தமாகவும், அன்பினால் ஊந்தப்பட்டும்,தேவனை கனப்படுத்தும்படியாகவும் கொடுக்க வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/