பலன்மாதிரி

பலன்

5 ல் 2 நாள்

பலன் 1: குறைவு நிறைவாகுதல்

நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.

2 இராஜாக்கள் 4:10

ஒரு நாள்,எலிசா தீர்க்கதரிசி சூனேமுக்கு வந்தபோது கனம் பொருந்திய ஒரு பெண் அவரை வருந்தி தன் வீட்டுக்கு கூப்பிட்டாள்.அப்படியே பயணப்பட்டு வரும்போதெல்லாம் போஜனம்பண்ணி தங்குவார். அவர் பரிசுத்தவான் என்று கண்டு தன் வீட்டு மெத்தையில் ஒரு அறைவீட்டைக் கட்டி சில சலுகைகள் (2 இரா 4:10) செய்யும்படி தன் புருஷனிடம் கூறினாள்.அப்படியே அவர்கள் செய்து கொடுத்தார்கள்.

பின்பு ஒரு நாள், எலிசா கட்டிலில் படித்திருக்கும் போது, இவ்வளவு கரிசனையோடு சேவை செய்யும் அந்த ஸ்திரீக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று எலிசா நினைத்தார். அவளிடம் கேட்டபோது, "என் ஜனத்தின் நடுவே சுகமாய் குடியிருக்கிறேன்" என்றாள்.அப்பொழுது எலிசாவின் வேலைக்காரனான கேயாசி,அவளுக்கு பிள்ளை இல்லை என்ற பெரிய குறையை தெரிவித்தான்.

ஆனால் இவ்வளவு பெரிய குறைவின் மத்தியில் எப்படி இவ்வாறு ஒரு பதிலை அவளால் சொல்ல முடிந்தது?

ஜெபம் செய்து செய்து ஓய்ந்ததினாலோ அல்லது தன்னுடைய கணவன் கிழவனாய் இருப்பதினாலோ வாய்ப்பே இல்லை என்று விரக்தி அடைந்து தன் இருதயத்தை தேற்றிக்கொண்டு நமக்கு இருக்கிறதை வைத்து சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்து தன் மனதை பக்குவப்படுத்தி இருக்கக்கூடும். அவள் தீர்க்கதரிசிக்கு செய்த நன்மைக்கு பிரதிபலன் எதிர்பார்க்கவில்லை என்பதினாலும் அவள் தன் குறைவை சொல்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் எந்த ஒரு பெண்ணுக்கும் தனக்கு பிள்ளை வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா.

சிறு குறைகளையும் பெரிதாக பேசும் பெண்களுக்கு மாறாக, தன் நிறைவை மட்டும் சுட்டிக்காட்டி சுகமாய் இருக்கிறேன் என்றாள். ஆனால் நம் தேவனோ இருதயத்தின் ஆழத்தை அறிந்திருக்கிறவர்.

தன்னிடத்தில் வருகிற தீர்க்கதரிசிக்கு தனி அறை வேண்டும்,மேஜை வேண்டும், நாற்காலி வேண்டும், குத்துவிளக்கு வேண்டும் என்று யோசித்து செய்து கொடுத்தவளுக்கு,தேவன் அவளுக்கு இருக்கும் குறைவை நிறைவேற்றினார்.

பிள்ளை பிறக்கும் என்று எலிசா மூலம் வாக்கு கொடுத்து, உற்பவ காலதிட்டத்தில் பிள்ளை என்ற பலனை கொடுத்தார். இத்தனை வருடம் குழந்தை இல்லாத அவர்கள் வீட்டில் குழந்தை சத்தம் கேட்கும் பொழுது எத்தனை மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்!

உங்களுக்கு இருக்கும் நீண்ட நாள் ஏக்கம் என்ன? அவைகளை நிறைவேற்ற தேவன் வல்லவராய் இருக்கிறார்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

பலன்

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்!( லூக்கா 6:38) இதுதான் கொடுப்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் வாக்குறுதி. மேற்கோள் காட்டிய வசனம் போலவே இன்னும் அநேக வாக்குத்தத்தங்கள் முழு வேதாகமத்திலும் உண்டு. சிலர்,தான் புகழப்படுவதற்காகவும், தன் பேர் பெருமைக்காகவும், கொடுப்பதுண்டு. ஏன் போட்டியின் நிமித்தம் கொடுப்பவர்களும் உண்டு. மற்றும் சிலர், கொடுத்தால் தேவன் பலன் கொடுப்பார் என்று பலனை எதிர்பார்த்தே கொடுப்பார்கள். ஆனால் கொடுப்பதின் நோக்கம் இரக்கத்தின் நிமித்தமாகவும், அன்பினால் ஊந்தப்பட்டும்,தேவனை கனப்படுத்தும்படியாகவும் கொடுக்க வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/