புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17  - சகோதரன் சித்தார்த்தன்

3 ல் 2 நாள்

புத்தி தெளிந்த போது...என்று சொல்லும் போது அவன்தெளிவு இல்லாமல்- ஒரு கலக்கத்தில் இருந்திருக்க வேண்டும். அந்த கலக்கம் தான் என்ன?

அவன் தன் தகப்பனோடு கொண்டுள்ள உறவைக்காட்டிலும் - சகல நன்மைக்கும் ஊற்றுக்காரணராகிய அவரை விட்டு, ஊதாரித்தனமான வாழ்க்கையை இச்சித்தான். இதுவே அவனுடைய கலக்கம்.

பந்தியில் உட்கார அனுமதி குமாரர்களுக்கு மட்டுமே. கூலிக்காரர்களுக்கு இல்லை.

அவன் குறைவுபடத்தொடங்கின போது தன்நிலை –“ தான் குமாரத்துவத்திற்கு பாத்திரவான் இல்லை” என உணர ஆரம்பித்தான். இதுவே Relaization – Realization brings repentance.

அப்பொழுது தன் தகப்பனிடத்திற்குச் செல்லும் ஒரு நல்ல முடிவை எடுக்கின்றான். சென்றவன் –”நான் பாவஞ்செய்தேன் என்று மனதிற்குள் சொல்வதில் மனம் திரும்புதலைக் காண்கிறோம்.

திரும்பி வந்த மகனை -தகப்பன் -குமாரனாகத்தான் வீட்டிற்குள் ஏற்றுகொண்டாரே அல்லாமல் - கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்று மனதுக்குள் அவன் சொன்ன வார்த்தைகளைக்கூடச் ”சொல்ல விடவில்லை”.

இதுதான் நம் தேவனுடைய உண்மையான அன்பு. நாம் இழந்த புத்திரபாக்கியத்தை -தர நம் மனதுருக்கத்தின் ஆண்டவர் / மீட்பர் இயேசு இன்றைக்கும் காத்துக்கொண்டிருக்கின்றார். இதுவே நற்செய்தி.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17  - சகோதரன் சித்தார்த்தன்

பாவம் (SIN) -என்பதன் அர்த்தம் - குறி தவறும் அம்பு; வழி தப்பிப்போன ஆடு, காணாமல் போன வெள்ளிக்காசு; (மரித்த -தேவனோடு உள்ள உறவிலிருந்து பிரிந்த) வாழ்க்கை. இயேசு - பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்; அவர்களோடு சாப்பிடுகிறார் (ஐக்கியப்படுகிறார்) – என்பதே இங்கே அவரைக்குறித்து முறுமுறுக்கப்பட்ட வார்த்தைகள். சர்வலோகமும் அதுவாக தானாக தோன்றவில்லை. சிருஷ்டிப்பு என்று ஒன்று இருக்குமானால் சிருஷ்டிகர் என்று ஒருவர் இருக்கத்தான் வேண்டும். இயேசு யார்? யோவான் 1:18 நமக்கு கற்றுத்தருவது :பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரன் – தேவனை வெளிப்படுத்தினார். சர்வலோகத்தையும் சிருஷ்டித்தவர்– தேவன் -அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய மடியிலிருக்கிற குமாரன் – இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டால் போதும் இயேசுவே தேவனுடைய ஒரேபேறான குமாரன். இயேசு – வழிதப்பிப்போனவர்களை ஏற்றுக்கொள்வது தேவனுடைய சுபாவத்தை நமக்கு காட்டுகிறது. நாம் புத்திதெளிந்து - மனம்திரும்பி வரும் போது - நம்மைஅவருடைய பிள்ளைகள்- CHILDREN என்றே அழைக்கிறார் - வேலைக்காரன் என்று அல்ல என்பதே இந்தத் தொடர்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d