புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17  - சகோதரன் சித்தார்த்தன்

3 ல் 3 நாள்

தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசுவை) இவ்வுலகிற்கு தந்தருளி இவ்வளவாய் அன்புகூர்ந்திருக்கின்றார் (யோவான் 3:16) என்பதே நற்செய்தி. இது சத்தியம்.

நாம் மாட்டை வண்டிக்கு பின்னால் கட்டினால் அது ஓடாது; மாற்றி மாட்டை வண்டிக்கு முன்னால் கட்டினால் வண்டி ஓடும்….இதுவே இன்று நாம் செய்ய வேண்டியது. ஆங்கிலத்தில் PUT FIRST THINGS FIRST என்பார்கள். இது தான் புத்தி தெளிந்த போது.......

இன்றைக்கு நமது முன்னுரிமையை (FIRST PRIORITY) இயேசு என்னும் நாமத்திற்கு தந்து - விசுவாசம் உள்ளவர்களாய் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போது நமக்கு நமது புத்திரபாக்கியமும் அதற்குரிய சிலாக்கியங்களும் நமக்கு உரிமை ஆகிறது.

இன்றைய வேத வாசிப்பு பகுதியில் நாம் காணும் : பிதாவாகிய தேவன் நமக்கு மோதிரத்தை அணிவிப்பது “நாம் பிள்ளைகள்” என்ற அதிகாரத்தை திரும்ப தருவதையும் – பாதரட்சையை அணிவிப்பது “நமது தேவைகளை சந்திப்பார் நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாப்பார்” என்ற நிச்சயத்தை தருவதையும் காட்டுகிறது..

கேள்வி: நம்முடைய வாழ்வில் முதலிடத்தை - தேவனுக்கு - தேவனுக்கு தான் என்று கொடுப்போமா?

செயல்படுங்கள் ; சந்தோஷப்பட்டு களிகூருங்கள் நீங்கள் தேவனுடைய குமாரர்/ குமாரத்திகள்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17  - சகோதரன் சித்தார்த்தன்

பாவம் (SIN) -என்பதன் அர்த்தம் - குறி தவறும் அம்பு; வழி தப்பிப்போன ஆடு, காணாமல் போன வெள்ளிக்காசு; (மரித்த -தேவனோடு உள்ள உறவிலிருந்து பிரிந்த) வாழ்க்கை. இயேசு - பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்; அவர்களோடு சாப்பிடுகிறார் (ஐக்கியப்படுகிறார்) – என்பதே இங்கே அவரைக்குறித்து முறுமுறுக்கப்பட்ட வார்த்தைகள். சர்வலோகமும் அதுவாக தானாக தோன்றவில்லை. சிருஷ்டிப்பு என்று ஒன்று இருக்குமானால் சிருஷ்டிகர் என்று ஒருவர் இருக்கத்தான் வேண்டும். இயேசு யார்? யோவான் 1:18 நமக்கு கற்றுத்தருவது :பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரன் – தேவனை வெளிப்படுத்தினார். சர்வலோகத்தையும் சிருஷ்டித்தவர்– தேவன் -அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய மடியிலிருக்கிற குமாரன் – இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டால் போதும் இயேசுவே தேவனுடைய ஒரேபேறான குமாரன். இயேசு – வழிதப்பிப்போனவர்களை ஏற்றுக்கொள்வது தேவனுடைய சுபாவத்தை நமக்கு காட்டுகிறது. நாம் புத்திதெளிந்து - மனம்திரும்பி வரும் போது - நம்மைஅவருடைய பிள்ளைகள்- CHILDREN என்றே அழைக்கிறார் - வேலைக்காரன் என்று அல்ல என்பதே இந்தத் தொடர்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d