குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்மாதிரி

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

7 ல் 1 நாள்

குற்ற உணர்வால் நீ நிரம்பியிருக்கிறாயா? அப்படி இருக்க வேண்டியதில்லை!

  • "இன்று நான் ஆண்டவருடன் போதுமான நேரத்தை செலவிடவில்லை ..."
  • "என்னுடைய வேதாகமத்தை நான் அதிகம் வாசித்திருக்கலாம்..."
  • "நான் ஆண்டவருக்காக இன்னும் அதிகமான காரியங்களைச் செய்ய விரும்புகிறேன்"

இந்த அறிக்கைகள் உனக்கு நன்கு பரீட்சையமானவையா? நீயும் இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறாயா அல்லது சிந்தித்துக்கொண்டிருக்கிறாயா?

ஆண்டவர் உன்னிடமிருந்து இப்படிப்பட்டவைகள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர் அதிக நற்செயல்களையோ, அதிக ஜெபங்களையோ எதிர்பார்ப்பதில்லை. இதைச்செய் அல்லது அதைச்செய் என்று சொல்வதில்லை. நிச்சயமாக, இந்த விஷயங்கள் நீ அவருக்கு அருகில் நெருங்கி வரவும், அவரை நன்கு அறிந்துகொள்ளவும் உனக்கு உதவும்.

ஆனால் “செய்ய வேண்டிய இவைகளை” விட ஆண்டவர் உன்னைத்தான் அதிகம் விரும்புகிறார். உன் முழு வாழ்வையும் அவர் விரும்புகிறார். ஒருமுறை, எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ் இவ்வாறு கூறினார்‌: “ஆண்டவர் நம்மிடமிருந்து எதையும் விரும்புவதில்லை. அவர் நாம் இருக்கிற வண்ணமாகவே நம்மை விரும்புகிறார்."

"காரியங்களைச் செய்தல்" என்ற பக்கத்தை நீ வலியுறுத்தினால், குற்ற உணர்வு விரைவில் மோசமாகத் தலை தூக்கும். ஆனால் ஆண்டவர் உன்னை ஆக்கினைக்குள்ளாக்க விரும்புவதில்லை. அவர் உன்னை விடுவிக்கவே விரும்புகிறார்! போதுமான அளவு காரியங்களைச் செய்யாததற்காக உன்னை நீயே குற்ற உணர்வுக்குள்ளாகத் தள்ளிவிடாதே. ஏன் அப்படிச் செய்யக் கூடாது? ஏனென்றால், அவர் எல்லாவற்றிற்கும் மேலாக உன் இருதயத்தைத் தேடுகிறார். மேலோட்டமாக அல்ல, அவர் உன்னுடன் மிக ஆழமாக, நேரடியாக உறவாட விரும்புகிறார்.

"என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக." (நீதிமொழிகள் 23:26)

இதுதான் ஆண்டவரின் பார்வையில் விலையேறப்பெற்றது: நீ என்ன செய்கிறாய் என்பதைவிட, நீ யார் என்பதே அவருக்கு முக்கியம்.

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=carryingoutguilt