குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்மாதிரி

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

7 ல் 4 நாள்

மன்னிப்பு இங்கே இப்போதே கிடைக்கிறது!

நீ குற்ற உணர்வை விட்டுவிட உனக்கு உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம், நீ அப்படிப்பட்ட உணர்வோடு இருப்பதை ஆண்டவர் விரும்புவதில்லை! இருப்பினும், இந்த உணர்வு விடாப்பிடியாகப் பற்றிக்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நான் இன்று மன்னிப்பைப் பற்றி உன்னுடன் பேச விரும்புகிறேன், மேலும் இந்த சத்தியத்தை ஆண்டவருடைய வார்த்தையின் வாயிலாகப் பற்றிக்கொண்டு நடக்க நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.

இன்றே, இப்போதே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று நீ உறுதியாக நம்புகிறாயா?

வேதாகமத்தில் நாம் இதை வாசிக்கலாம்: "நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” (ஏசாயா 43:25)

இங்கேயே, இப்பொழுதே உனக்கு மன்னிப்பு இருக்கிறது. ஆண்டவர் உன் பாவங்களை ஒரே நாளில் அழித்துவிடுவதாகக் கூறவில்லை; ஆனால் இப்போதே அவைகளை மறையச்செய்கிறார். பூமியில் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்பதை நம்மால் உறுதியாக அறிய முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆண்டவருடைய வார்த்தையோ, உண்மையை நமக்கு உறுதியளிக்கிறது!

நமது ஆத்துமாக்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டுமென்று ஆண்டவர் அறிந்திருந்தார்; அதனால்தான், நம்முடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவின் மீது நாம் நம்பிக்கை வைத்தவுடன், நம்முடைய நேற்றைய, இன்றைய மற்றும் நாளைய பாவங்கள் அனைத்தும், மன்னிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அவர் வாக்களித்திருக்கிறார்!

உன் கடனை இரண்டு முறை செலுத்தித் தீர்க்க வேண்டும் என்று ஆண்டவர் ஒருபோதும் கோருவதில்லை. இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே உனக்காக விலைக்கிரயம் செலுத்திவிட்டார், இந்த உண்மை நித்தியம் வரைக்கும் உனக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

என்னுடன் சேர்ந்து ஜெபித்து, ஆண்டவரின் மன்னிப்பு எனும் வரத்தை இப்போதே பெற்றுக்கொள்ள உன்னை அழைக்கிறேன்... “பரலோகத் தகப்பனே, உமது ஆவியால் என்னை ஆராய்ந்து, என்னில் ஏதேனும் பொல்லாத வழி இருக்கிறதா என்று எனக்குக் காண்பியும். என் பாவங்களை மன்னியும். எல்லா பாவங்களிலிருந்தும் என்னைச் சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தத்திற்காக நன்றி செலுத்துகிறேன். உமக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும்படி மன்றாடுகிறேன். உம்முடன் சரியான உறவில் இருக்க முழு மனதுடன் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=carryingoutguilt