குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்மாதிரி

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

7 ல் 5 நாள்

இயேசு மலிவானதொன்றையும் பயன்படுத்துவதில்லை

நீ எப்போதாவது ஒட்டாத பசையை வைத்து எதையாவது ஒட்டவைக்க முயற்சித்திருக்கிறாயா? உதாரணமாக, பிய்ந்துபோன உன் ஷூவை நீ ஒட்டவைக்கும்படி, "நன்றாக ஒட்ட வைக்கும் பசைகளில்" ஒன்றான "சூப்பர் பசை" என்று அழைக்கப்படும் சிறந்த பசையைப் பயன்படுத்துகிறாய். ஆனால் ஒட்டவைத்த அடுத்த நாளே உன் ஷூ மீண்டும் பிய்ந்துவிடுகிறது!

உனது தவறுகளை "சரிசெய்ய", ​​இயேசு மலிவான பசை போன்ற ஒன்றைப் பயன்படுத்துவதில்லை என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது. அவர் அப்படிச் செய்தால், நீ முழுமையாக மன்னிக்கப்பட்டிருக்க மாட்டாய். உன் பிழைகள் ஒரு நாளுக்கு மட்டுமே அழிக்கப்படும், அது உனக்கு ஏமாற்றத்தையே தரும்.

இயேசு ஒருபோதும் உனக்கு ஏமாற்றத்தை அனுமதிப்பதில்லை, இயேசு ஒன்றை சரிசெய்யும்போது, ​​அது உறுதியானதாகவும், திடமானதாகவும் இருக்கும். அவர் காரியங்களை மிகவும் நன்றாகவும், சிறப்பாகவும் சரிசெய்து, பழையதை புதியதாக மாற்றுகிறார்! (மாற்கு 2:21-22)

ஆண்டவர் சகலத்தையும் புதிதாக்குகிறார் என்ற உறுதியான வாக்குத்தத்தத்தை அளிக்கும் வசனம் ஒன்று உண்டு என்பது உனக்கு தெரியுமா? இந்த வசனத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது : “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரிந்தியர் 5:17)

நீ இந்த வசனத்தை என்னுடன் சேர்ந்து பிரகடனம் செய்து உன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் அறிக்கையிடலாம்! “இப்படியிருக்க, நான் கிறிஸ்துவுக்குள்ளிருப்பதால் (இரட்சகராகிய அவரில் விசுவாசத்தின் மூலம் இணைந்திருக்கிறேன்) புது சிருஷ்டியாயிருக்கிறேன் (மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறேன்); பழையவைகள் (எனது முந்தைய மாம்சீக மற்றும் ஆவிக்குரிய நிலை) ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (ஏனென்றால் ஆவிக்குரிய விழிப்புணர்வு எனக்குப் புது ஜீவனை அளிக்கிறது).” (2 கொரிந்தியர் 5:17)

ஆண்டவர் உன் மீது வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானதல்லவா? உனது அனைத்தும் புதிதாக மாறிவிட்டது. உன் கடந்த காலமோ அல்லது இயேசுவை சந்திப்பதற்கு முன்பு நீ யாராக இருந்தாய் என்பதோ இனி முக்கியமில்லை. அவருடன் இணைந்த பிறகு சகலமும் நன்றாகவும், புதியதாகவும், திடமானதாகவும் மற்றும் உறுதியானதாகவும் மாறிவிட்டது. உன் தேவன் உன்னைத் தோல்வியுற விடமாட்டார். நீ பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறு!

உடைந்த ஒன்றை ஆண்டவர் சரிசெய்யும்போது, அது உண்மையிலேயே சரிசெய்யப்படுகிறது!

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=carryingoutguilt