குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்மாதிரி

இயேசு உனக்குத் துணை நிற்கிறார்!
இன்று, இந்த தியானத்தை நாம் நிறைவுசெய்கையில், நிக் வுயிசிக் சொன்ன ஒரு கதையை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
தனது மரணத்திற்குப் பிறகு, நியாயத்தீர்ப்பு எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்ததாக அவர் கூறினார். அவர் நியாயாதிபதியான ஆண்டவருக்கு முன்பு தான் நிற்பதாகக் கண்டார், அங்கே அவர்மேல் குற்றம் சாட்டுபவர்களும் இருந்தார்கள், அவர்கள் அவருடைய எல்லாப் பாவங்களையும் பட்டியலிட்டுக் காட்டி: “ஆண்டவரே, நிக் வுயிசிக் ஒரு பாவி. அவர் இந்தப் பாவங்கள் அனைத்தையும் செய்திருக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்திருக்கிறார். அவர் பரலோகத்திற்குச் செல்ல தகுதியற்றவர். அவர் நித்திய ஜீவனுக்குத் தகுதியானவர் அல்ல. அவர் ஒரு பாவி. அவர் நரகத்துக்குச் செல்ல வேண்டியவர்” எனக் கூறினர்.
பின்னர், இயேசு தனக்கு அருகில் நிற்பதைக் கண்டதாக நிக் இவ்வாறு கூறுகிறார். உடனே இயேசு ஆண்டவரை நோக்கிப் பார்த்து: “ஆம், பிதாவே, நிக் ஒரு பாவிதான். ஆனால் 15 வயதில், அவன் தனது வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைத்தான். அவனுடைய பாவங்களுக்காக நான் மரிக்கும்படி நீர் என்னை பூமிக்கு அனுப்பினீர் என்று அவன் நம்பினான், மேலும் அவன் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்டான். பிதாவே, உமது சித்தத்தின்படி அவன் பூமியில் வாழ்ந்து வந்தான். மேலும் அவன் என்னைப் பற்றி உலகிற்குச் சொல்லியிருக்கிறான். அவன் மன்னிக்கப்பட்டான். அவன் என்னுடையவன்" என்றார். அப்பொழுது ஆண்டவர் நிக்கிடம் திரும்பி, "எனது வாசஸ்தலத்திற்குள் பிரவேசி!" என்றார்.
இங்கே நீ இதைக் கவனிக்கலாம், இயேசு நிக் என்பவரின் பக்கமாக நிற்கிறார். ஆம், இயேசு உன் பக்கத்திலும் இருக்கிறார். ஆண்டவர் உனக்குத் துணையாக இருக்கிறார். மேலும் பரலோகத்திலும், உன் மீது குற்றம் சாட்டுபவர்கள் பேசத் தொடங்கும்போது, அவர் மீண்டும் உன் பக்கத்தில் நின்று உன்னைப் பாதுகாப்பார்.
நீ இயேசுவை விசுவாசிப்பதாலும், உனக்காக அவர் சிலுவையில் செய்த கிரியையை நீ விசுவாசிப்பதாலும், ஒரு நாள், "என் வாசஸ்தலத்திற்குள் பிரவேசி" என்று பிதாவாகிய ஆண்டவர் உன்னிடம் சொல்வதைக் கேட்பாய். எவ்வளவு சந்தோஷம் அது!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=carryingoutguilt
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

மன்னிப்பு என்பது ...

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

மனஅழுத்தம்

தனிமையும் அமைதியும்

இளைப்பாறுதலைக் காணுதல்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்
