குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
தேவனுடைய சத்தத்தை கேட்பதற்கு பல சமயங்களில் நாம் நமது வழக்கமான அலுவல்களை தவிர்த்து தனித்திருக்க வேண்டிய அவசியம் எற்படுகிறது. தேவனுடைய சத்தத்தை மிகத் துல்லியமாக கேட்பதற்கு நம்முடைய இருதயம் ‘அமர்ந்த’ (அமைதியான) நிலையில் இருப்பது அவசியம் (சங்கீதம் 46:10) அமைதியற்று இருப்பது தேவ சத்தத்தை கேட்பதற்கு உதவாது. எனவே மறுபடியும் பிறந்த விசுவாசிகளாகிய நாம், தேவன் நம்முடனே பேசுகிறார், பல வழிகளில் பேசுகிறார் என்பதை அறிந்திருப்பது முக்கியம். தேவனுடைய சத்தத்தை கேட்பது நமக்கு விலையேறப் பெற்றது. ஆகவே தேவன் எந்த விதத்தில் நம்மோடு பேசினாலும், அவர் சத்தத்துக்கு நாம் மிகவும் கவனமாய் செவிகொடுக்க வேண்டும்.
தேவன் பிரதானமாய் நம்மோடு அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகத்தான் பேசுகிறார். அவ்வாறு தேவன் பேசும்போது பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையைக் குறித்த வெளிச்சத்தையும், வெளிப்பாட்டையும் நம்முடைய உள்ளத்திலும் மனதிலும் கொடுக்கிறார் (தானியேல் 9:1, 2). அதுமட்டுமல்ல, நம்முடைய ஆவியில், “உள்ளான சாட்சியின்” மூலமாகவும் தேவன் நம்மோடு பேசுகிறார். (ரோமர் 8:16; 1 யோவான் 2:20, 27; நீதிமொழிகள் 20:27). தேவன் இவ்வாறு பேசும்போது தெய்வீக சமாதானம் நம்முடைய உள்ளத்தை நிரப்புவதைக் காணமுடியும். வெளியே பார்ப்பதற்கு எல்லாமே மோசமான சூழ்நிலையைப் போல தெரியலாம்; ஆனால், தேவன் நம்மோடு பேசினபடியால், எல்லாமே நல்ல விதமாக மாறும், அமையும் என்கிற நிச்சயம் நமக்குள் உண்டாகிறது. மேலும், அபிஷேகிக்கப்பட்ட தேவ ஊழியர்கள் மூலமாகவும், (மல்கியா 2:7; அப்போஸ்தலர் 21:10), தேவ தரிசனங்கள் மூலமாகவும் (அப்போஸ்தலர் 22:17-21), உவமைகள் மூலமாகவும் (உவமை என்பதற்கு எபிரெய வார்த்தை t’mnuah என்பதாகும். அதற்கு சாயல் அல்லது ரூபம் என்று அர்த்தம்) பேசுகிறார் (எபிரெயர் 1:17, 18, 19; ஒசியா 12:10).
‘சரியான சூழ்நிலைகள்’ மூலமாகவும் தேவன் சிலரோடு பேசினார் என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனிதர்கள் தேவனுடைய சத்தத்தை கேட்கவோ, புரிந்து கொள்ளவோ இயலாத நிலையில் இருந்தவர்கள்; ஏனென்றால், மறுபடியும் பிறந்த நமக்குள் வாசமாயிருப்பது போல பரிசுத்த ஆவியானவர் அன்று அவர்களுக்குள் வாசம்பண்ணவில்லை (ஆதியாகமம் 24:12-24). இன்னும் சொல்லப்போனால், ஓடி ஒளிந்து கொள்ளாமல், தேவனுடைய சத்தத்தைக் கேட்க விரும்புகிற மக்களை தேவன் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை (ஆதியாகமம் 3:8).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.