குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 5 நாள்

நானும் தேவ சத்தத்தை அரிதாய் சில சமையங்களில் கேட்டதுண்டு. நான் விரும்பி அப்படி நடக்கவில்லை; தேவனுடைய சித்தத்தின்படி அப்படி நடந்தது. முதல் முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்டபோது, என் ஆவிக்குள் அவருடைய வார்த்தை எரிவதைப் போலவும், என் காதுகளில் அவருடைய சத்தம் கேட்பதைப் போலவும் உணர்ந்தேன் (எண்ணாகமம் 12:6-8). அது மிகவும் நிஜமாயிருந்தபடியல், நான் வெகு நேரம் ஒரு குழந்தையைப் போல அழுதுகொண்டிருந்தேன்.

தேவன் முதல் முறை என்னோடு பேசின போது, அவருடைய ஊழியத்திற்கு என்னை அழைத்தார். அதன்பிறகு ஒவ்வொரு முறை தேவன் பேசும் போதும், அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையதாகவும், கொஞ்சங்கூட சந்தேகத்துக்கிடமின்றி மிகத் தெளிவாகவும் இருக்கும். அதுமட்டுமல்ல, அவர் சுற்றி வளைத்து பேசிக் கொண்டிராமல், சொல்ல வேண்டியதை அப்படியே நேரடியாக சொல்லி விடுவார். இதில் முக்கியமான காரியம் என்னவென்றால், அவருடைய வார்த்தை என்னை உடனடியாக செயல்பட வைக்கும்! தேவன் உங்களுடன் பேசுவதையும் நான் கவனித்திருக்கிறேன். மற்ற விசுவாசிகளை விட நீங்கள் முக்கியம் என்பதாலோ அல்லது எல்லாருடைய கவனமும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்பதாலோ தேவன் அப்படி பேசுவதில்லை. மாறாக, அவர் உங்களோடு இருக்கிறார், உங்கள் மீது மிகவும் அக்கறையும், கரிசனையும் கொண்டிருக்கிறார் என்பதை காண்பிக்கவே அவர் உங்களோடு பேசுகிறார்.

நிலைமை மோசமாகும்போது, பிற்போக்கான சூழ்நிலைகளைக் கண்டு மனம் தடுமாறும்போது, பிரிச்சனைகள் நம்மை மூழ்கடித்து நம்மை இடறிவிழ செய்து விடுமோ என கலங்கும் வேளையில் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட, எடுத்துக்காட்டான விதங்களில் நம்மோடு பேசுகிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். கடந்த 33 வருடங்களுக்கு மேலாக கர்த்தரை பின்பற்றி வருகிற நான், சில இக்கட்டான நேரங்களில் தேவன் நேரடியாக தலையிட்டிராவிட்டால், அவருடைய ரேமா (Rhema) வார்த்தையை எனக்கு அருளாமலிருந்திருந்தால் நான் இன்றைக்கு இந்த வார்த்தைகளை உங்களிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.

தேவன் உங்களிடம் கூட இவ்வாறாக பேசுகிறார் என்று நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன். அவர் உங்களோடு இவ்வாறு பேசக் காரணம், அவர் நிஜமானவர், ஜீவனுள்ளவர், உங்கள் மீது எப்போதும் அக்கறையும் கரிசனையும் உள்ளவர் என்பதை உங்கள் இருதயத்தின் ஆழத்தில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கத்தான்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.