வேதாகமம் உயிருள்ளதுமாதிரி

كلمة الله حية

7 ல் 1 நாள்

வேதாகமம் உயிருள்ளது

வேதாகமம் நமக்காக கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை. தேவன் தம்முடைய ஆள்தத்துவம், மற்றும் மனிதகுலத்தை இரட்சித்து மீட்க அவருடைய திட்டத்தை குறித்து மனிதர்களிடம் கூறிய குறிப்பு இதில் எழுத பட்டிருக்கிறது. அது தேவனால் உண்டானதினால், வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆலோசனை சொல்ல, உணர்த்த, நம்மை மாற்ற வல்லமை கொண்டது.

உங்களுடைய மனது புதுப்பிக்கப்பட்டு, உன் ஜீவியம் மாறிய நிகழ்வை சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் தொடர்ந்து இடைவிடாமல் வேதாகமத்தை வாசிப்பீர்களானால் அதன் ஊக்கிவிக்கும், உற்சாகப்படுத்தும், சவால் கொடுக்கும் வல்லமையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

வேதாகமம் ஒரு சரித்திர பாடத்தை காட்டிலும் மேலானது. அது தேவன் ஏற்கனவே செய்ததை விவரிக்கிறதாக இருந்தாலும் கூட, அது தேவன் என்ன செய்வார்என்பதையும் நமக்கு காட்டுகிறது. தேவன் சரித்திரம் முழுவதும் நிகழ்த்தி வருகிற நிகழ்வுகளை நமக்கு வெளிப்படுத்துகிறது, நம்மைக்கொண்டு அவர் சொல்ல விரும்பும் செய்தி அது.

ஆதிகாலம் முதலே தேவனுடைய வார்த்தை மனிதர்களுடைய இருதயத்தை அசைத்து வந்திருக்கிறது, அதன் உத்வேகம் பட்டணங்கள், தேசங்கள் மற்றும் கண்டங்களை மாற்றியிருக்கிறது.

ஆகவே இந்த வாரம், வேதாகமம் எப்படி ஜீவிக்கிறது மற்றும் நம்முடைய உலகத்தில் கிரியை செய்துகொண்டிருக்கிறது என்று தேவன் கிறிஸ்துவர்களை கொண்டு இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளை வைத்து பாப்போம்-இந்த நிகழ்வு இருளை ஊடுருவி நம்பிக்கையை கொடுத்து, ஜீவியங்களை மாற்றி, உலகத்தை மாற்றும் வல்லமை கொண்டது.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

كلمة الله حية

ஆதிமுதல், தேவனுடைய வார்த்தை இருதயங்களையும் மனதுகளையும் மாற்றிவருகிறது-தேவன் அந்த கிரியையை முடித்துவிவில்லை. இந்த விசேஷித்த 7-நாள் திட்டத்தில், தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கொண்டாடி, வேதாகமத்தை கொண்டு தேவன் எவ்வாறு சரித்திரத்தையும் உலகத்தையும் மாற்றினார் என்று தெளிவாக காண்போம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.