வேதாகமம் உயிருள்ளதுமாதிரி

كلمة الله حية

7 ல் 6 நாள்

வேதாகமம் நம்பிக்கை கொண்டுவருகிறது

கானா* 2016-இல் இயேசுவின் மறுரூபமாக்கும் வல்லமையை காணும் மட்டும் ஒரு பக்தியுள்ள முகமதிய பெண்ணாக இருந்தால். ஆனால் கிறிஸ்துவத்திற்கு மாறியபிறகு, அவள் தள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படாமல், அவளுடைய மக்களாலும் குடும்பத்தாலும் தள்ளிவைக்கப்பட்டால். ஒரு வேளையில், அவளுடைய பிள்ளைகள் அவளிடம் இருந்து எடுக்கப்பட்டு வேறொரு தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

கானா இயேசுவை தள்ளிப்போட மறுத்தாலும், அவள் விசுவாசத்தில் வளர ஒரு நிச்சயமான துணையை கொண்டிருக்கவில்லை. தனிமையாக சோகத்தில், அவள் தற்கொலை செய்துகொள்ளவும் நினைத்ததுண்டு. ஆனால் முடிவில் YouVersion-ஐ தன் கைபேசியில் இரக்கம் செய்துதர ஒரு நபர் வழிநடத்தினார்.

முதலில் கானா ஈர்க்க படவில்லை, ஆனால் பின்னர் நாளுக்கான வசனத்தை விடியற்காலை வாசிக்க துவங்கினால், அதன் மூலம் அவள் அதை தியானித்து அந்த நாளுக்கான வழிகாட்டியாக கொண்டிருக்கும்படி காத்திருந்தாள். காலம் செல்ல செல்ல, எதிர்பாராத காரியம் நடந்தது...

“அந்த வசனங்கள் எனக்குள் ஜீவன் பெற்று எனக்குளாக வாசிக்க துவங்கியது. அவைகள் நான் மக்களோடு உறவு எவ்வாறு கொள்ளவேண்டும், மண அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடவேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுக்க துவங்கின. நான் தள்ளப்பட்டிருந்தாலும், நான் அந்த வசனங்களை வாசிக்கும்போதெல்லாம் நான் தேற்றப்பட்டேன். நான் அனுதின வசனத்தை வாசிக்கும்போதெல்லாம், அது ஏதாகிலும் ஒரு வழியில் என்னை உயர்த்தி எனக்கு நம்பிக்கை தந்தது. இந்த வசனங்கள் மூலம் தேவன் என்னோடு நேரடியாக பேசுவதுபோல இருந்தது.”

கானா இப்போது எங்கு சென்றாலும் அனுதின வசனத்தை மற்றவர்களுக்கு பகிர தருணம் தேடுகிறாள். அந்த வசனங்களை இணையதளத்தில் பதிவிட்டு, சமுதாயம், அவளுடன் வேலைசெய்கிறவர்கள் அனைவரும் தேறுதல் பெறவேண்டும் என்று வாஞ்சிக்கிறாள்.

நம்மெல்லாரிலும் தேவனுடைய வார்த்தை என்ன கிரியையை செய்யக்கூடும் என்பதற்கு கானா-வின் வாழ்க்கை ஒரு சான்று. சூழ்நிலைகள் மாறலாம், உணர்வுகள் ஏறி இறங்கலாம், மக்கள் நம்மை ஏமாற்றி கைவிடலாம்-ஆனால் தேவனுடைய வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். ஆகவே, நாம் சமாதானத்தையும் நம்பிக்கையையும் எல்லா சூழ்நிலைகளிலும் உணரலாம். ஏனென்றால் தேவனுடைய வார்த்தை நம் இருதயத்தில் கிரியை செய்ய அனுமதிக்கும்போது, அது அங்கேயே நிலைத்து இருக்கும்.

இன்று, தேவனிடம் இந்த ஜெபத்தை சொல்லி அவர் வார்த்தையை உங்களிடம் கொண்டுவர கேளுங்கள்:

தேவனே, நீர் என்னை சிருஷ்டித்தீர், என்னை அறிந்திருக்கிறீர். நீர் மாத்திரமே என் ஜீவியத்தை மாற்ற வல்லமை கொண்டிருக்கிறீர். ஆகவே இன்று என் ஜீவியத்தை உம் வார்த்தைக்கு இணங்க நீர் உதவ கேட்கிறேன். நான் என்ன சந்தித்தாலும், நான் உம் வார்த்தைக்கு உண்மையாக இருக்க துணிவை தாரும், அதன்மூலம் உம் சத்தியத்தையும் அன்பையும் மற்றவர்களுக்கு நான் பறைசாற்ற. என்னுடைய விசுவாச வேர்களை ஆழமாக வளர செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

*அடையாளம் தெரியாதபடிக்கு பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

كلمة الله حية

ஆதிமுதல், தேவனுடைய வார்த்தை இருதயங்களையும் மனதுகளையும் மாற்றிவருகிறது-தேவன் அந்த கிரியையை முடித்துவிவில்லை. இந்த விசேஷித்த 7-நாள் திட்டத்தில், தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கொண்டாடி, வேதாகமத்தை கொண்டு தேவன் எவ்வாறு சரித்திரத்தையும் உலகத்தையும் மாற்றினார் என்று தெளிவாக காண்போம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.