வேதாகமம் உயிருள்ளதுமாதிரி
வேதாகமம் அனைத்தையும் மாற்றுகிறது
அனைத்தும் இருளாக வடிவமில்லாமல் இருக்கும் நிலையில் தேவன் "வெளிச்சம் உண்டாகட்டும்" என்று சொன்னவுடன் அனைத்தும் மாறும் நிகழ்வை யோசித்து பாருங்கள். அந்த வெளிச்சம் இருளை ஊடுருவி, எது காணக்கூடாமல் இருந்ததோ இப்போது தெளிவாக காணப்படுகிறது. தேவன் சொன்ன ஒரு வார்த்தை அனைத்தையும் மாற்றியது ... ஆனால் அதோடு நின்றுபோகவில்லை.
ஒரு மூச்சு காற்றில் இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்த அதே தேவன் அவருடைய வார்த்தையின் வல்லமையை கொண்டு இன்றும் புதிய ஜீவனை இந்த உலகத்திற்குள்ளாக ஊதுகிறார். தேவனுடைய வார்த்தை இன்னமும் இருளை ஊடுருவி செல்கிறது. இன்னமும் தேவனுடைய வார்த்தை ஜீவியங்களை மறுரூபமாக்கி காயப்பட்ட இருதயங்களை புதுப்பிக்கிறது. தேவனுடைய வார்த்தை ஜீவிக்கிறதாகவும் கிரியைசெய்கிறதாகவும் உள்ளது ஏனென்றால் அவர் ஜீவித்து கிரியை செய்கிறவராக இருக்கிறார். நாம் அவருடைய வார்த்தையிடம் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறோம்.
நாம் வேதாகமத்தை அதிகம் வாசிக்கும்போது, தேவன் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட, கிரியாபூர்வமான, மீட்கப்படும் உறவை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று அதிகமாக கண்டு அறிவோம்.
நாம் என்ன சோதனைகளும் கஷ்டங்களும் சந்தித்தாலும், தேவனுடைய வார்த்தை இன்னமும் சென்று இருளை ஊடுருவி செல்ல கூடியதாக இருக்கிறது. அவருடைய வார்த்தை தொடர்ந்து கானா, சுமு, பாப்புலுக்கா மக்கள், சாமுவேல் ஆஜாயி க்ரௌத்தர் மற்றும் வில்லியம் டின்டேல் போன்றவர்களை மாற்றும். அவருடைய வார்த்தை உன்னை மாற்றும் வல்லமையை கொண்டிருக்கிறது.
ஆகவே பொறுமையோடு யோசித்து பார் உன்னுடைய ஜீவிய கதையை. தேவன் உன்னை எவ்வாறு மாற்றியிருக்கிறார்? இப்போது தேவன் உன் ஜீவியம் மூலம் எவ்வாறு வேதாகமத்தை உயிர் பெற செய்துகொண்டிருக்கிறார்?
இம்மட்டும் தேவன் உன் வாழ்வில் செய்தவைகளுக்காக கொண்டாடு, உன்னை சுற்றிலும் உள்ள உலகில் அவர் என்ன செய்கிறார் என்று யோசித்து பார்.
முன்னோக்கி, தேவன் சொல்லும் இந்த நிகழ்வுகளின் பங்காக உன்னை ஒப்புக்கொடு. அவர் இந்த உலகை உருவாக்கியபோது துவங்கின நிகழ்வு அது, அது இயேசு வரும் மட்டும் தொடரவிருக்கிறது-அது சரித்திரம் முழுவதும் நடந்து இன்றும் உலகத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த திட்டத்தைப் பற்றி
ஆதிமுதல், தேவனுடைய வார்த்தை இருதயங்களையும் மனதுகளையும் மாற்றிவருகிறது-தேவன் அந்த கிரியையை முடித்துவிவில்லை. இந்த விசேஷித்த 7-நாள் திட்டத்தில், தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கொண்டாடி, வேதாகமத்தை கொண்டு தேவன் எவ்வாறு சரித்திரத்தையும் உலகத்தையும் மாற்றினார் என்று தெளிவாக காண்போம்.
More