வேதாகமம் உயிருள்ளதுமாதிரி

كلمة الله حية

7 ல் 3 நாள்

வேதாகமம் தேசங்களை மாற்றும்

1800-களின் ஆரம்ப வருடங்கள் அவைகள். 12 வயது நைஜீரியா-வை சேர்ந்த ஒரு பையனும் அவன் குடும்பமும் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு சென்ற ஒரு கப்பலில் அடிமைகளாக அனுப்பப்பட்டனர். ஆனால் அந்த கப்பல் ஆபிரிக்கா-வை விட்டு செல்வதற்கு முன்னதாகவே அதில் திடீர் சோதனை செய்து அடிமைத்தன ஒழிப்பு குழு ஒன்று அந்த கடத்தல் கும்பலை கைதுசெய்தது. அந்த பயனும் அவன் குடும்பமும் விடுவிக்கப்பட்டு சியாரா லியோன் என்ற இடத்திற்கு அனுப்ப பட்டார்கள். இங்குதான் அவன் வேதாகமத்தின் வல்லமையை குறித்து கேள்விப்படுகிறான்.

கிறிஸ்துவனாக மாறிய பின்பு, சாமுவேல் ஆஜாயி க்ரௌத்தர் அநேக மொழிகளை கற்று சியாரா லியோனை சுற்றி இருந்த தேசங்களுக்கு ஊழியப் பணியில் செல்கிறான். ஆனால் இந்த முழு நேரமும் வேதாகமத்தை ஆங்கிலேயத்தில் வாசிக்கிறான், ஏனெனில் அது யோரூபா என்ற-நைஜீரிய மொழியில் அவனிடம் இல்லை.

இதற்கு அர்த்தம் ஆங்கிலேயம் தெரியாத நைஜீரிய மக்களால் தேவனுடைய வார்த்தையை தானாக வாசிக்க முடியாது. ஆகவே ஆஜாயி யோரூபா மொழிக்கு ஒரு எழுதப்பட்ட இலக்கணத்தை எழுதி வேதாகமம் அந்த மொழிக்கு மாற்றப்பட வழி வகுக்கிறான்.

அவன் யொரூபா மொழிக்கு மொழிபெயர்ப்பு முடித்த பிறகு, மற்ற நைஜீரிய மொழிகளுக்கும் அதை மொழிபெயர்த்து அநேக மக்கள் அவன் பெற்ற ஜீவிய மாற்றத்தை பெற்றுக்கொள்ள வழி வகுத்தான்.

க்ரௌத்தர் பின்னர் "நைஜீரிய பிஷப்"-ஆக ஆங்கிலேய சபைக்கு நியமிக்க பட்டார். அவர் முதல் கருப்பு இன ஆங்கிலேய பிஷப்-ஆக நியமிக்கப்பட்டார். இன்று, நைஜீரிய ஆங்கிலேய சபை 18 மில்லியன் ஞானஸ்தானம் பெற்ற அங்கத்தினர்களுடன் ஆங்கிலேய சபைகளில் இரண்டாவது பெரிய சபையாக இருக்கிறது.

இந்த உலகத்தில் தம் வார்த்தையை கொண்டு தாக்கத்தை ஏற்படுத்த க்ரௌத்தர்-உடன் இருந்த தேவன் உன்னுடனும் இன்று இருக்கிறார். அநேக மக்கள் வேதாகமத்தால் மாற்றப்பட காத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை சந்திக்க நீதான் சரியான கருவியாக இருக்கிறாய்.

ஆகவே இன்று, தேவனிடம் அவர் சொல்லும் இந்த நிகழ்வில் நீ எந்த பங்கை வகிக்கவேண்டும் என்று அவரிடம் கேள். பின்பு நீ கேட்பதற்கும், நினைப்பதற்கும், கற்பனை செய்வதற்கும் மேலாக அவர் செய்யும் காரியங்களை பார்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

كلمة الله حية

ஆதிமுதல், தேவனுடைய வார்த்தை இருதயங்களையும் மனதுகளையும் மாற்றிவருகிறது-தேவன் அந்த கிரியையை முடித்துவிவில்லை. இந்த விசேஷித்த 7-நாள் திட்டத்தில், தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கொண்டாடி, வேதாகமத்தை கொண்டு தேவன் எவ்வாறு சரித்திரத்தையும் உலகத்தையும் மாற்றினார் என்று தெளிவாக காண்போம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.