துக்கத்தை கையாளுதல்மாதிரி

துக்கத்தை கையாளுதல்

10 ல் 2 நாள்

கேள்விகளை கேட்பது சரியானது 

மரணம் மற்றும் மரிப்பது பற்றி உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். நமக்கு அன்பானவர் ஒருவர் மரித்தால் அசௌகரியமாகவோ, சோகமாகவோ அல்லது கோபமாகவோ உணர்வதும், அதை குறித்து கேள்விகள் கேட்பதும் சரியானதுதான்.

மார்த்தாளும் மரியாளும் துக்கப்பட்டார்கள். இவர்களது சகோதரன் லாசரு மரித்து நான்கு நாட்களுக்கு முன்பு அவரை அடக்கம் செய்தனர். அவன் வியாதியாக இருக்கிறான் என்று இயேசுவிடம் சொல்லும்படி அவருக்குச் செய்தி அனுப்பியிருந்தார்கள். அவர் தங்களுக்கு உதவி செய்ய விரைந்து வருவார் என்று அவர்கள் நம்பினர். கண்டிப்பாக அவர் ஏதாவது செய்திருக்க வேண்டும். ஆனால் நாட்கள் கடந்துவிட்டன, இயேசுகிறிஸ்து வரவில்லை, இப்போது லாசரு மரித்து அடக்கம் செய்யப்பட்டான். அவர்களும் அவர்களது நண்பர்களும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஆகவே, லாசரு மரித்த பிறகு இயேசு அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது, மார்த்தாள் அவரிடம், “நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” என்று சொல்கிறாள்.  

மார்த்தாள் தன் சகோதரனின் மரணம் குறித்து கோபத்தை வெளிப்படுத்துகிறாள். பலர் மார்த்தாளை போன்றவர்கள்—தங்களுக்கு நெருக்கமான ஒருவர் மரித்தால் கோபமடைகிறார்கள். மார்த்தாள் கோபமடைந்ததற்காக இயேசுகிறிஸ்து விரக்தியடையவில்லை என்பது சுவாரஸ்யமானது. நாம் நேசிக்கும் ஒருவர் மரித்தால் கோபப்படுவது இயற்கையானது என்பதை இயேசு கிறிஸ்து புரிந்துகொள்கிறார். நாம் எப்படி உணர்கிறோம் என்பதை தேவன் புரிந்துகொள்கிறார்.

ஆண்டவரே, நீர் இங்கு இருந்திருந்தால், என் அம்மாவுக்கு ஏன் இவ்வளவு பெரிய நோய் வந்தது? விபத்து ஏன் நடந்தது? என் அன்புக்குரியவர் ஏன் மரித்தார்? என் கணவர் ஏன் மரித்தார்? ஏன் என் மனைவி மரித்தாள்? சோகம் ஏன் எங்களைத் தாக்கியது? என் கணவரை முன்பே மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க கூடுமோ? நான் அவளை நன்றாக கவனித்துக்கொண்டிருந்தால், அவள் இன்னும் உயிருடன் இருந்திருப்பாளோ? தேவன் ஏன் என் ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லை? “இவைகள் எல்லாம் நடக்கும்போது தேவன் எங்கே இருந்தார்?" “ஏன் தேவன் வரவில்லை?" போன்ற தேவனிடம் கேட்கும் கேள்விகள் உங்களிடம் இருந்திருக்கிறதா?


ஏன் என்ற கேள்விகளைக் கேளுங்கள். அவை அறிவுப்பூர்வமாக எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை என்றாலும் கேளுங்கள். மரணத்தை விளக்கும் மருத்துவ காரணங்களோ அல்லது பிற தகவல்களோ கிடைத்தாலும், அது திருப்திகரமாக இருக்காது.

மரியாள் மார்த்தாளை விட வித்தியாசமாக நடந்து கொண்டாள். மரியாள் மிகவும் அழுதாள். அநேகமாக அவளும் கோபமாக இருந்திருக்கலாம், ஆனால் அவள் பெரும்பாலும் சோகமாகவும் மனச்சோர்வுடனும் இருக்கிறாள். இயேசுகிறிஸ்துவிடம் வந்து, அவருடைய காலில் விழுந்து, அடக்க முடியாமல் அழுததாக வேதம் கூறுகிறது. அவள் கண்ணீரை அடக்கவில்லை. அழுகையை நிறுத்தும்படி இயேசு கிறிஸ்து அவளிடம் கூறவில்லை என்பதைக் கவனியுங்கள். இயேசுகிறிஸ்து நம் வருத்தத்தை புரிந்துகொள்கிறார். நாம் விரும்பும் ஒருவர் மரித்தால் நாம் வருத்தப்படுவது இயற்கையானது மற்றும் இயல்பானது. 

எனவே, தொடர்ந்து செல்லுங்கள், உங்கள் கேள்விகளை தேவனிடம் தனியாகக் கேட்பதில் நேரத்தை செலவிடுங்கள். அவர் புரிந்து கொள்வார். நீங்கள் ”ஏன் என்ற கேள்விக்கு திருப்திகரமான  பதிலை கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த “ஏன்" என்ற கேள்வியை “எப்படி” என்று மாற அனுமதியுங்கள். கண்டுபிடிக்கப் போவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் "ஏன்" “எப்படியாக” மாற அனுமதியுங்கள். இந்த தோல்விக்குப் பிறகு நான் எப்படி முன்னேறப் போகிறேன்?

உங்கள் சந்தேகங்களில் நீங்கள் தனியாக இல்லை என்பதையும், உங்கள் உண்மையான உணர்வுகளை தேவனிடம் வெளிப்படுத்த நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இயேசுகிறிஸ்துவின் இருதயம் உங்கள் இருதயத்தை உடைக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆறுதலடைவீர்கள். அவருடைய மிக நெருக்கமான கவனிப்பை எவ்வாறு அனுபவிப்பது என்பதை நீங்கள் கண்டறிந்தால், உங்கள் துன்பம் ஏன் தேவனுக்கு  முன்பு மிகப்பெரிய தாக்கமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.


 மேற்கோள்: விசுவாசம் என்பது அந்த நேரத்தில் நீங்கள் புரிந்து கொள்ளாத வழிகளாகிய  தேவனின் குணாதிசயத்தின் மீது ஆர்வத்துடன் நம்பிக்கை வைப்பது - ஓஸ்வால்ட் சேம்பர்ஸ்

ஜெபம்: ஆண்டவரே, நான் உம்மிடம் என் கேள்விகளைக் கொட்டும்போது நீர் விரக்தியடையாததற்கு நன்றி. எனக்கு எல்லா பதில்களும் கிடைக்காவிட்டாலும், நீர் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறீர் என்பதை அறிந்து, உம்மில் இளைப்பாறுதலைக்  காண எனக்கு உதவி செய்யும். ஆமென்.


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

துக்கத்தை கையாளுதல்

நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay

சம்பந்தப்பட்ட திட்டங்கள்