துக்கத்தை கையாளுதல்மாதிரி

துக்கத்தை கையாளுதல்

10 ல் 4 நாள்

துக்கத்தின் நடுவில் நம்பிக்கை   

தேவன் இன்னுமும் இடைப்பட கூடும்  ஆனால்! 

லாசரு வியாதிப்பட்டிருப்பதாக இயேசுகிறிஸ்துவுக்குச் செய்தி கிடைத்தது. இந்தச் செய்திக்கு இயேசுகிறிஸ்துவின் பதில், “இந்த வியாதி மரணத்தில் முடிவடையாது என்று கூறாமல், அது தேவனுடைய மகிமைக்காக என்பதாக இருந்தது”, அதனால் தேவனுடைய குமாரன் அதன் மூலம் மகிமைப்படுத்தப்படுவார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு “இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொன்னார்”.

“அவர்கள் விசுவாசிக்கும்படியாக” அவர் காத்திருந்தார். தேவனுடைய தாமதங்களுக்கு எப்போதும் ஒரு நோக்கம் உண்டு. அவர் நம்மை அழைத்துச் செல்ல விரும்புகிற விசுவாசத்தின் பெரும் ஆழங்கள் பல உள்ளன. அவர் தம்மால் சுகமாக்க முடியும் என்று அவர்களுக்கு ஏற்கனவே சுகப்படுத்திக்காண்பித்தார்; இப்போது மரணத்தின் மீதும் தமக்கு அதிகாரம் இருப்பதை அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் தாமதித்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.

தேவன் உங்களுடன் இல்லாதவராக நாம் உணரும்போது, அவருடைய ஏற்ற நேரத்தில் நீங்கள் அறியாததும், பெரிதானதும் மற்றும் பொருள் நிறைந்ததுமான காரியமொன்றை உங்களுக்குக் கற்பிக்க விரும்புவது சாத்தியமா?

இதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உங்களால் பொறுமையுடன் இருக்க முடியுமா? தேவன் எல்லாவற்றையும் உருவாக்கும் அளவுக்கு பெரியவர் என்றால், உங்களால் புரிந்துகொள்ள முடியாத துன்பத்தை அனுமதிக்கும் அளவுக்கு அவர் பெரியவர் என்று உங்களால் நம்ப முடிகிறதா? தேவன் தம்முடைய அன்பு, நீதி மற்றும் இராஜாரீகம் ஆகியவற்றில் பரிபூரணமானவராக இருந்து, தொடக்கத்திருந்து முடிவு வரை காண்கிறவர், மேலும் அவர் என்ன செய்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அதை விசுவாசிப்பதற்கு இது உங்களுக்கு உதவுகிறதா?

உங்கள் அன்புக்குரியவர் குணமடைய நீங்கள் ஜெபித்திருக்கிறீர்களா? அப்படி ஜெபித்தும் அவர் மரித்துவிட்டாரா?  

எல்லாம் முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் “என் நாமம் அதன் மூலம் மகிமைப்படும்." என்று தேவன் கூறுகிறதை விசுவாசிக்கிறீர்களா? 

யோவான் 17:24 ல் இயேசு தம் பிதாவுடன் நெருக்கமாக இருப்பதையும், ஜெபத்தின் பிரதிபலிப்பையும் பற்றி கூறும் இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது, நம் அன்புக்குரிய ஒருவர் மரிக்கும் நாமும் அவருக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும் என்ற வரிகளைப் படிக்கிறோம். இதில் இயேசுகிறிஸ்துவின் விருப்பத்தை கவனமாக சிந்தித்துப் பாருங்கள் “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.”

தம்முடைய ஜனங்கள் தம்முடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இயேசுகிறிஸ்து பரலோகத்தில் இருந்து ஆட்சி செய்யும்போது முற்றிலும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறார், ஆனால் யோவான் 17 இல் கூறப்பட்டுள்ள அவரது ஜெபத்தின்படி, அவருக்கு இன்னும் ஒரு குறிப்பிட்ட நிறைவேறாத ஆசை உள்ளது: அவருடைய ஜனங்கள் ஏற்கனவே அவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட வீட்டில் அவருடன் சேர வேண்டும் என்று விரும்புகிறார். (யோவான் 14:2-4)

கர்த்தரை அறிந்த அன்பான ஒருவர் மரித்துவிட்டால், பிதாவானவர், இயேசுகிறிஸ்துவின் ஜெபத்திற்கு பதிலளித்தார் என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். நம் அன்புக்குரியவர்களின் மரணத்தின் மீது தேவன் இராஜரீகம் உடையவர், நாம் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத நோக்கங்களை அவர் கொண்டிருக்கிறார், ஆனால் இயேசு தம் ஜனங்களை வீட்டிற்கு அழைத்து வரும்படி தமது தந்தையிடம் ஜெபித்தார் என்ற உண்மையை நாம் பற்றிக்கொள்ளலாம். ஒரு விசுவாசி மரிக்கும் போது, பிதா தமது குமாரனின் மன்றாட்டுக்கு பதில் அளிக்கிறார்.

குறைந்த பட்சம் நாம் இப்படிச் சொல்லலாம்: அன்புக்குரியவர் மரித்தால், நமக்கு ஏற்படும் இழப்பை விட, இயேசு கிறிஸ்துவுக்கு அதிக நன்மை கிடைக்கிறது. 

ஆம், நாம் இழந்துவிட்டோம். இனி ஒருபோதும் அந்த அன்புக்குரியவருடன் இனிய உறவைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம். இழப்பின் அளவுவை நம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் இந்த இழப்பு ஒருபோதும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது அல்ல: “பிதாவே, நீர் எனக்குத் தந்த மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.”

வாளிகளை நிரப்பும் அளவுக்கு நாம் கண்ணீர் சிந்தலாம், ஆனால் நம் அன்புக்குரியவரின் மரணத்திற்கான பதிலாக இயேசுவின் ஜெபத்தை தவிர வேறொன்றையும் கூற முடியாது என்பதை உணரும்போது நம் கன்னங்களில் ஓடும் அந்த கண்ணீர் துளிகள் மகிழ்ச்சியில் மின்னும்.

இங்கே நாம் நம்பிக்கையைக் காண்கிறோம்.

மேற்கோள்: விசுவாசிகள் ஒருபோதும் “குட் பை" என்று கூற மாட்டார்கள்; “நாம் மீண்டும் சந்திக்கும் வரை என்று கூறுவார்கள்" - உட்ரோ க்ரோல்

ஜெபம்: ஆண்டவரே, துக்கத்தின் மத்தியில், விரைவில் நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதற்கு நன்றி. ஆமென்


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

துக்கத்தை கையாளுதல்

நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay