துக்கத்தை கையாளுதல்மாதிரி
துக்கத்திற்கான இரண்டு உதாரணங்கள்
டேவிட் மற்றும் அவரது மனைவி ஸ்வேயா ஃப்ளட் (Svea Flood), இளம் தம்பதியராக 2 வயது மகனுடன், 1921 இல் காங்கோவுக்கு மிஷனரிகளாகச் சென்றனர்.
கொஞ்ச காலத்தில் அவரது மனைவி ஸ்வேயா மலேரியாவால் பாதிக்கப்பட்டாள். இதற்கு நடுவே, அவள் கர்ப்பமாக இருந்தாள், பல மாதங்கள் கடுமையான காய்ச்சலைத் தாங்கிக்கொண்டிருந்தாள்.
இறுதியில், ஸ்வேயாவின் உடல் மலேரியாவால் மிகவும் மோசமாகி, அவள் படுத்த படுக்கையானாள், ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு வாரத்தில் அவள் மரித்துவிட்டாள்.
டேவிட் ஃப்ளட் தனது மனைவியின் மரணத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தார். அவர் அவளது கல்லறைக்கு அருகில் சிறு மகனுடன் நின்றுகொண்டிருந்தபோது, அவரது மண் குடிசையிலிருந்து தன் குழந்தை மகளின் அழுகுரல் கேட்டது. திடீரென்று, கசப்பு அவரது இதயத்தை நிரப்பியது. அவருக்குள் ஒரு கோபம் எழுந்தது - அவரால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “தேவனே ஏன் இதை அனுமதித்தீர்? உயிரைக் கொடுக்கவா இங்கே வந்தோம்! என் மனைவி மிகவும் அழகாகவும், திறமையாகவும் இருந்தாள். இங்கே அவள் இருபத்தேழு வயதில் மரித்து கிடக்கிறாள்
“இப்போது எனக்கு இரண்டு வயது மகன் இருக்கிறான், என்னால் ஒரு பெண் குழந்தையைப் பராமரிக்க முடியாது. நீர் என்னை கைவிட்டுவிட்டீர், தேவனே. என்ன வீணான வாழ்க்கை இது!" என்று புலம்பினார்.
அவர் புதிதாக பிறந்த தனது மகளை மற்றொரு மிஷனரியிடம் கவனித்துக் கொள்ளக் கொடுத்துவிட்டு, “நான் ஸ்வீடனுக்குத் திரும்பப் போகிறேன். நான் என் மனைவியை இழந்துவிட்டேன், இந்த குழந்தையை என்னால் கவனிக்க முடியாது. தேவன் என் வாழ்க்கையை அழித்துவிட்டார். என்று, தனது அழைப்பை மட்டுமல்ல, தேவனையும் நிராகரித்து துறைமுகத்தை நோக்கிச் சென்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் சுற்றிலும் மதுபான பாட்டில்கள் கிடந்த கட்டிடத்தில் அவரைக் கண்டாள். அவருக்கு இப்போது எழுபத்து மூன்று வயது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது, மற்றும் கண்புரை அவரது இரு கண்களையும் மூடியிருந்தது.
ஆனால் அவர் தனது மகளுடன் நடந்த சந்திப்பு அவரை மனந்திரும்புவதற்கும், அவர் மரிப்பதற்கு முன்பு கர்த்தரிடம் திரும்பியதற்கும் வாய்ப்பாக அமைந்ததற்கு தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆனால் அவரது முழு வாழ்க்கையும் வீணாகிவிட்டது.
லெட்டி கௌமன் மற்றும் அவரது கணவர் சார்லஸ் ஆகியோர் 1900களில் மிஷனரிகளாக ஜப்பான் சென்றனர்.
பதினாறு வருடங்கள் தினசரி கூட்டங்கள், ஒரு வேதாகம நிறுவனம், ஒரு அமைப்பு, கொரியா மற்றும் சீனாவில் பிரசங்கிக்கும் சுற்றுப்பயணங்களை மேற்பார்வையிட்ட பிறகு, சார்லசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே சார்லசும் லெட்டியும் அமெரிக்கா திரும்பினர்.
கலிபோர்னியாவில், சார்லஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது, பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. லெட்டி தனது அன்புக்குரிய சார்லஸுக்கு அடுத்த ஆறு வருடங்கள் பாலை மட்டுமே உணவாக கொடுத்துக்கொண்டிருந்தாள். ஆனால் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1924 செப்டம்பரில் சார்லஸ் மரித்துப்போனார்.
சார்லஸின் மரணம் லெட்டிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு குழந்தை இல்லாததால், சார்லஸ் மட்டுமே அவளுடைய வாழ்வின் எல்லாமுமாக இருந்தார். அவர்கள் “பரலோகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்” போன்று வாழ்ந்தனர், ஒருவருக்கொருவர் முற்றிலும் அர்ப்பணித்திருந்தனர். அவள் தன் கணவன் மரித்தப் பின்னர் நாட்குறிப்பில், "இது பூமியில் வாழும் நரகம்!" என்று எழுதியிருந்தாள். தேவன் சார்லஸைக் குணப்படுத்த வேண்டும் என்று லெட்டி ஜெபம் செய்தாள். அவர் ஏன் குணப்படுத்தவில்லை? நூற்றுக்கணக்கான மக்கள் குணமாகும்படிக்கு சார்லஸ் அவர்களை தேவனிடம் அழைத்துச் சென்றார் அல்லவா? அப்போது அவர் எங்கே இருந்தார்?”
லெட்டி தனக்கு உதவும்படிக்கு தேவனுடைய வார்த்தைக்கு திரும்பினாள். அவளிடம் தமது சித்தத்தை விட அவள் கணவன் குணமடைவது பெரியதா? என்று அவர் அவளிடம் கேட்பது போல் தோன்றியது. லெட்டி, வேதத்திலும் பாடுகள் மற்றும் ஊக்கமூட்டுதல் ஆகியவற்றை சார்ந்த புத்தகங்களை படிப்பதிலும் பல மணிநேரம் செலவிட்டாள். இந்தப் புத்தகங்களிலிருந்து பல சத்தியங்களை நகலெடுத்தாள். ஆனால் தனக்காக மட்டுமின்றி மற்றவர்களுக்காகவும் இந்த வேலையைச் செய்கிறாள் என்பது அவளுக்கு அப்போது தெரியாது, ஏனென்றால் திருமதி. கௌமனின் அனுபவங்கள் மற்றும் மனவேதனைகள் அவள் படித்த புத்தகங்களிலிருந்து அவள் சேகரித்த நூற்றுக்கணக்கான ஞான வார்த்தைகளடங்கிய, “பாலைவனத்தில் நீரோடைகள்” என்ற புத்தகம் பிறந்தது. மேலும் 90 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த புத்தகம் அச்சிடப்படுவதை நிறுத்தவேயில்லை, மேலும் பல மொழிகளில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று தீர்ந்தது.
.
துக்கத்தினால் அநேகருடைய வாழ்வு தொடப்படுவதற்கு நீங்கள் தேவனை அனுமதிக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை வீணாக்கலாம். தேர்வு உங்களுடையது.
மேற்கோள்: “நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவ்வளவுதான். நீங்கள் தேவனுக்காக படைக்கப்பட்டீர்கள். அதை வீணாக்காதீர்கள். ”- ஜான் பைபர்
ஜெபம்: ஆண்டவரே, நேசிப்பவரின் இழப்பின் காரணமாக என் வாழ்வில் உம்மை ஒருபோதும் கைவிடாமல் இருக்க எனக்கு உதவும். என் வாழ்க்கையை வீணாக்காமல் இருக்க எனக்கு உதவும், உமது மகிமைக்காக என்னுடைய துக்கத்தை அனுமதிக்கவும். ஆமென்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay