துக்கத்தை கையாளுதல்மாதிரி

துக்கத்தை கையாளுதல்

10 ல் 10 நாள்

வாழ்வு குறுகியது 

நேசிப்பவரின் இழப்பு வாழ்வு குறுகியது என்ற  யதார்த்தத்தை நமக்கு அடிக்கடி உணர்த்துகிறது.

வாழ்க்கை எளிதாகவும், விரைவாகவும் முடியக்கூடியது. சிலருக்கு இந்தப் பயணம் சில வருடங்கள் மட்டுமே நீடிக்கும். மற்றவர்களுக்கு, இது பல தசாப்தங்களாக நீடிக்கும். ஆனால் அனைவருக்கும், ஒரு நாள் முடிவு வரும்.

மரணம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்து, நம் வாழ்வு எவ்வளவு குறுகியதாக இருக்கும் என்று சிந்திக்க நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால், சில சமயங்களில் நமது வாழ்வின் வரம்புகளைக் கற்றுக்கொள்ள  வாழ்நாள் முழுவதும் ஆகலாம் அல்லது ஒரு உயிரை இழக்க நேரிடலாம். அதனால்தான் சங்கீதம் 90:12-ல் “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” என்று ஜெபிக்கும்படி மோசே கூறுகிறார்.

நாம் பணம், விளையாட்டு மதிப்பெண்கள், உணவுக் கலோரிகள் போன்றவற்றை மதிப்பிடுவது போலவே, நம் நாட்களை மதிப்பிடுவதாக இருந்தால், அதையும் நாம் உயர்ந்த ஒன்றாக எண்ணுதல் வேண்டும். தங்கள் பொருளாதார மூலதனத்தை மிகைப்படுத்தி மதிப்பிடும் ஒருவர் பொருளாதரா ரீதியாக பொறுப்பற்றவராக இருப்பது போல், தங்களின் ஆயுட்காலத்தை மிகைப்படுத்தி மதிப்பிடும் ஒருவர் பொறுப்பற்றவராக இருக்கிறார். நாளைய தினத்தை தனக்கு சாதகமாக கருதாமல் அதை ஒரு பரிசாகக் கருதுவதில் அபார ஞானம் இருக்கிறது.

வாழ்வு குறுகினது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பற்றி நாம் சிந்திக்கலாம் – நம் காணும் ஒவ்வொருவரும் இன்றோ  அல்லது நாளையோ மரிக்கலாம் - ஆனால் வாழ்க்கை நிச்சயமற்றது மட்டுமல்ல, அது மிகவும் குறுகியதும் கூட.

“ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்…அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்” (யோபு 14:1-6) என்று யோபு கூறுகிறார்.

அல்லது, மோசேயின் வார்த்தைகளில், சங்கீதம் 90:10 இல் 'நம்முடைய நாட்களின் நீளம் எழுபது வருடங்கள் - அல்லது எண்பது, நமக்கு வலிமை இருந்தால்; இன்னும் அவற்றின் காலம் தொல்லையும் துக்கமும்தான், ஏனென்றால் அவை விரைவில் கடந்து செல்கின்றன, நாங்கள் பறந்து செல்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

தன்னை வாலிபன் என்று எண்ணி, சாவே வராததை   போல் வாழ்பவன் குறைந்த பட்சம் ஒரு மதிகேடன், வேதத்தில் இந்த வகையான  மனிதன் ஒருவனை தேவன் இப்படி தான் அழைத்தார் (லூக்கா 12:20). 

வாழ்க்கை குறுகினது என்பதை உணர்ந்துகொள்வது உங்கள் மீது மிகவும் தெளிந்த ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வழிவகுக்க வேண்டும்.

நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, நேசித்து, சேவை செய்ய முற்படும்போதுதான் உங்கள்  பூமிக்குரிய குறுகின வாழ்க்கைக்கான அர்த்தமும் நிறைவும் கிடைக்கும். 

பவுல் இப்படியாக எழுதினார் “ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்”(அப்போஸ்தலர் 20:24).

 இப்படி, உங்கள் பூமிக்குரிய குறுகிய வாழ்க்கை முடிவுக்கு வரும்போது, நீங்கள் தேவனிடம் மகிழ்ச்சியற்றவர்களாக செல்லாமல், உங்கள் வாழ்க்கை தேவனுடைய நித்திய ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கிப் பயணப்படுவதை உங்கள் பாக்கியமாக உணர்வீர்கள். மேலும் பவுலுடன் இணைந்து விசுவாசத்துடன் இவ்வாறு நீங்கள் கூறலாம் ‘ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

ஆம், வாழ்க்கை குறுகினது, இருந்தாலும் நித்திய முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்காக வாழ்வதற்கு என எண்ணும் அறிவைப் பெறுங்கள்.

மேற்கோள்: “உலகில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பல விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல, ஆனால் ஒரு பெரிய விஷயத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்." ஜான் பைபர்

ஜெபம்: ஆண்டவரே, என் வாழ்க்கை குறுகியது என்பதை அறிந்து, அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த எனக்கு உதவும்,  இதனால் நான் உங்களைச் சந்திக்கும் நேரம் வரும்போது, நான் தயாராக இருப்பேன். ஆமென் 


வேதவசனங்கள்

நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

துக்கத்தை கையாளுதல்

நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay