துக்கத்தை கையாளுதல்மாதிரி

துக்கத்தை கையாளுதல்

10 ல் 6 நாள்

தேவன் தம்முடைய சிங்காசனத்தில் இன்னமும் வீற்றிருக்கிறார்

திடீர் விபத்தில், அல்லது ஒரு சிறு குழந்தை திடீரென எதிர்பாராத விதத்தில் மரிக்கும் சமயங்களில், இது அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்கும்.  நாம் விதியின் பதுங்கு குழியில் தத்தளிக்கிறோம். பாதுகாப்பற்ற இந்த உணர்வு சில சமயங்களில் தேவனும் ஆச்சரியப்படுவதைப் போல நம்மை உணர thoytataiவைக்கலாம், ஏனெனில் நாம் ஒரு கொடிய நோயைக் கண்டறிந்து காலத்தின் முன்கணிப்பை அளிப்பதற்கு அவர் நமக்கு போதுமான எச்சரிக்கை அல்லது ஆயத்தமாவதற்கு நேரத்தை வழங்கவதில்லை


ஆனால் ஜீவன் மற்றும் மரணத்தின் மீது தேவன் முற்றிலும் இறையாண்மை கொண்டவர் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது. அவர் ஒருபோதும் பாதுகாப்பு வளையத்தில் சிக்கிக்கொள்வதில்லை, உலகில் நடக்கும் நிகழ்வுகளில் அவர் ஒருபோதும் ஆச்சரியப்படுவதில்லை. ஆனால், அவர் எல்லாவற்றையும் மிக நுணுக்கமாக நிர்ணயிக்கிறார்.  இந்த சத்தியமே திடீர் இழப்பின் மயக்கத்தில் தத்தளிக்கும் இருதயத்திற்கு சமாதானத்தையும் நிம்மதியையும் தருகிறது. 


“ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று மத்தேயு:29-31 கூறுகிறது. 


இது வருத்தப்படும் இருதயத்தில் பதியப்பட வேண்டிய ஒரு விலைமதிப்பற்ற, ஆழமான சத்தியம்.


ஜே.சி.ரைல் இவ்வாறு எழுதுகிறார், “கர்த்தரின் அடிசுவடுகளில் நடக்கக்கிற மனிதன் மகிழ்ச்சியானவன்”, எனக்கு எது நல்லது என்பதை நான் அவரிடமிருந்து பெற்றுக்கொள்வேன். என் வேலை முடியும் வரை நான் பூமியில் வாழ்வேன், அதற்கு பின் ஒரு கணம் கூட இருக்க மாட்டேன். பரலோகத்திற்கு செல்ல முதிர்ச்சியடையும் போது எடுத்துக்கொள்ளப்படுவேன், ஒரு நிமிடத்திற்கு முன்பாகவும் எடுத்துக்கொள்ளப்படமாட்டேன். தேவன் அனுமதிக்கும் வரை உலகின் எந்த சக்திகளும் என் உயிரைப் பறிக்க முடியாது. தேவன் என்னை அழைக்கும் போது, பூமியிலுள்ள அனைத்து மருத்துவர்களாலும் அதிலிருந்து பாதுகாக்க முடியாது.


லாசருவின் விஷயத்தில், வேதம் இவ்வாறு கூறுகிறது, “இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்திற்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதனால் மகிமைப்படுவார் என்றார்.” 

உங்கள் குறிப்பிட்ட தேவைக்காக உங்கள் ஜெபத்திற்கு தேவன் ஆம் என்று கூறுவதற்கும் அவருடைய மகிமையை உங்களுக்கு வெளிப்படுத்த ஆம் என்று கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் அர்த்தத்தை, தேவன் தம்மை மகிமைக்காக நம் வலியை எப்படிப் பயன்படுத்தினார் என்பதை நாம் ஒருநாள் புரிந்துகொள்வோம்.

வாழ்க்கை நம்மை காயப்படுத்துவதை விட்டுவிடாது, ஆனால் இயேசுகிறிஸ்து நம்மை கவனிப்பதை விட்டுவிடமாட்டார். நீங்கள் அவரை விசுவாசித்தால், அவர் தமது மகிமையை உங்களுக்குக் காட்டுவார்.

மரணம் முடிவல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த சோகத்தில் அர்த்தம் இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஆனால் மரணம் அர்த்தமற்றதாக இருக்காது.


நாத்திக நம்பிக்கையின் அவலம் என்னவென்றால், அனைத்தும் இறுதியில் வெளித்தோற்றத்தில் அர்த்தமற்றவை. வாழ்க்கையின் இறுதி முடிவு மரணம் என்பதால் அது சோகமாகிறது என்பதாகும். ஆனால் நம் இருதயங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சோகத்தில் கூட அர்த்தம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் நற்செய்தி நுால்களிலும் அப்படி தான் உள்ளது.

 “தேவன் தம்முடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய், தம்மை நேசிக்கிறவர்களின் நன்மைக்காகவே எல்லாவற்றிலும் கிரியை செய்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம்” என்று ரோமர் 8:28 நமக்கு உறுதியளிக்கிறது.

 

தேவன் இன்னும் சிம்மாசனத்தில் இருக்கிறார் என்பதையும், உங்கள் காயங்களை மற்றவர்களுக்கு உதவவும், ஊக்கப்படுத்தவும் நீங்கள் அவரை அனுமதிக்கும்போது, சிறந்ததும், அர்த்தமும் மற்றும் முக்கியத்துவமும் நிறைந்த  நாட்கள் இனிமேல் வரவுள்ளன என்று நீங்கள் நம்புவதற்கு தேவன் இந்த தியானப் பகுதியை பயன்படுத்துவாராக. மேலும் அதுவே மகிமையான வாழ்வு.

மேற்கோள்: “தேவன் நம் இன்பங்களில் நம்மிடம் மென்மையான பேசுகிறார், நம் மனசாட்சியில் பேசுகிறார், ஆனால் நம் வலியில், மந்த செவிகளுடைய உலகத்தை எழுப்புவது அவரது மெகாஃபோனில் கத்துகிறார்." சி.எஸ்.லூயிஸ்

ஜெபம்: ஆண்டவரே, நீர் இன்னும் சிம்மாசனத்தில் இருப்பதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன், என் அன்புக்குரியவரின் இழப்பின் மூலம் கூட, நீர்உமது நாமத்தை மகிமைப்படுத்துவதோடு, என் வாழ்க்கையையும் அழகாக மாற்றுவீர். ஆமென்


வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

துக்கத்தை கையாளுதல்

நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay