ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?மாதிரி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

6 ல் 1 நாள்

உங்கள் வாழ்க்கையைக் குறித்த ஆண்டவரின் திட்டங்கள் உங்கள் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவை!

வேதம் கூறுகிறது, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (வேதாகமத்தைப் பார்க்கவும், எரேமியா: 29:11)

எப்படிப்பட்ட திட்டங்களை வேதம் நமக்குக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? அவைகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.....

தேவன் உங்களைத் தனிப்பட்ட முறையில் அறிவார் என்று கூறுவதிலிருந்து நான் துவங்குகிறேன்.... உங்கள் விருப்பங்கள், திட்டங்கள், கனவுகள், பயங்கள் மற்றும் உங்களால் கூடாதவைகள் அனைத்தையும் அறிவார். உங்கள் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கையை அவர் அறிவார். உங்கள் குறைபாடுகள் ஒவ்வொன்றையும் அறிந்திருக்கிறார்.

வேதம் நமக்கு என்ன கூறுகிறது: "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி.... " (பார்க்கவும், எரேமியா 1:5)

ஆண்டவர் உங்களைப் பரிசுத்தப்படுத்தி இருக்கிறார்; அவர் உங்களைப் பிரித்தெடுத்திருக்கிறார். இது நல்ல செய்தி அல்லவா?

அவர் உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட திட்டங்களாகிய அவைகள், உங்களை அவருக்கு மிக அருகில் கொண்டு வரும். மேலும் அது நீங்கள் விரும்பிய அதே நபராக உங்களை மாற்றும்.

உங்கள் திட்டங்களில் ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்தால் நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ அதைச் செய்வதற்கான பலத்தை அவர் எப்பொழுதும் உங்களுக்கு அளிப்பார். எப்பொழுதும் தேவனை உங்களுக்கு அருகில் நீங்கள் கொண்டிருக்கும் போது உங்களைப் பயப்படுத்துகிற காரியங்கள் உங்கள் மீது அதிகாரம் செலுத்த முடியாது. தேவனோடு இருக்கிற ஒரு நபர் எப்பொழுதும் பெரும்பான்மையாக இருப்பார்.

இன்றைய நாளின் உங்களுக்கான என் ஜெபம் என்னவென்றால், ஆண்டவரை உங்களுடைய அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்களின் மையத்தில் வைக்க வேண்டும் என்பதேயாகும். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களுக்கு எது சிறந்தது என்று அவருக்குத் தெரியும். அவர் உங்களுக்கு அருகில் இருக்கும்போது உங்களால் எல்லாம் கூடும்.

இந்த வாசிப்பின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை பெறுவதற்கு இங்கே இலவசமாக பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

இந்த திட்டத்தில் எரேமியா 29:11ல் உள்ள வசனத்தை நாம் ஆழமாக தியானிக்க துவங்குவோம். வேதாகமத்திலேயே நான் மிகவும் நேசிக்கும் ஒரு வசனம் தான் இது. "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தில் நாம் இன்னும் அதிகமாக வளர, இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படித்து அதிலிருந்து போதனைகள் மற்றும் விதிமுறைகளைப் பெற்றுக்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=godsplan