ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?மாதிரி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

6 ல் 2 நாள்

ஆண்டவர் அறிவித்ததை யாரும் தடுக்க முடியாது

வேதாகமம் சொல்கிறது: "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11)

இன்று, இந்த வார்த்தைகள் உங்கள் இருதயத்தைத் தொட அனுமதிக்கும்படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்...

“என் மகனே /மகளே,

உன் வாழ்க்கைக்கான ஒரு திட்டம் என்னிடம் உள்ளது.

நான் பேசிய அனைத்தும்,

நான் உனக்கு வாக்களித்தவைகள்,

நான் உனக்கு அறிவித்த கனவுகள்,

உன்னைக் குறித்து என்னால் சொல்லப்பட்டவைகள்.....அனைத்தும் நிறைவேறும்.

ஆம், எல்லாவற்றையும் முன்கூட்டியே நான் உனக்காகத் திட்டமிட்டிருக்கிறேன்.

நீ கடந்து செல்வதற்குத் தேவையான அனைத்தையும் ஏற்கனவே அளித்திருக்கிறேன்:

துன்பம், வியாதி, பணத்தேவை.

நான் அறிவித்ததை யாராலும் ரத்து செய்யவோ அழிக்கவோ முடியாது.

நீ முன்னோக்கிச் செல்லலாம்.

நான் உன்னைக் கைவிடமாட்டேன்.

இறுதி வரை நான் உன் பக்கம் நடப்பேன்.

நான் உனக்கு ஒரு படி முன்பாக இருக்கிறேன். நான் உனக்கு முன்பாகச் செல்கிறேன்.

நீங்கள் செல்லவிருக்கும் பாதையில்..... நான் ஏற்கனவே நடந்து சென்றுவிட்டேன்.

நான் எல்லா மலைகளையும் சமம் செய்து, எல்லாத் தடைகளையும் தாண்டினேன்.

நீ என்னை நம்பலாம்."

(எரேமியா: 29 :11)

இன்று உங்களுக்கான என் ஜெபம் என்னவென்றால், ஆண்டவர் அறிவித்ததை யாரும் தடுக்க முடியாது என்பதை நீங்கள் முழுமையாக உணர வேண்டும். நாம் ஜெபித்து ஆண்டவர் கிரியைகளை நடப்பிப்பார் என்று அறிக்கையிட ஒரு நிமிடம் எடுத்துக்கொள்வோமா?

பிதாவே, நான் உம்முடையதாக இருப்பதற்கு நன்றி! என் வாழ்க்கை உம்முடையது, உம்மில் நான் விலைமதிப்பற்றவன்/விலைமதிப்பற்றவள். என் வாழ்க்கையில் உம்முடைய பரிபூரணமான திட்டம் நிறைவேறுவதற்காக நன்றி! என் வளர்ச்சிக்காகவும் என் வாழ்க்கையில் உம்முடைய சித்தத்தை நான் உணர்ந்து கொள்வதற்காகவும், அனைத்தும் சரிசெய்யப்படுகிறது என்பதை நான் நம்புகிறேன். ஆம், நீர் உம்முடைய வாயினால் பேசியதை உம்முடைய கரங்கள் நிறைவேற்றுகின்றன. நீர் அறிவித்ததை யாரும் தடுக்க முடியாது. இயேசுவின் நாமத்தில் ஆமென்!

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

இந்த திட்டத்தில் எரேமியா 29:11ல் உள்ள வசனத்தை நாம் ஆழமாக தியானிக்க துவங்குவோம். வேதாகமத்திலேயே நான் மிகவும் நேசிக்கும் ஒரு வசனம் தான் இது. "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தில் நாம் இன்னும் அதிகமாக வளர, இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படித்து அதிலிருந்து போதனைகள் மற்றும் விதிமுறைகளைப் பெற்றுக்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=godsplan