ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?மாதிரி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

6 ல் 4 நாள்

ஆண்டவர் காற்புள்ளியை மட்டுமே வைக்கும் இடத்தில் முற்றுப்புள்ளியை வைக்காதீர்!

இன்று, எரேமியா 29 :11ஐ வாசித்து நமது சிறப்பு தியானத்தைத் தொடர்வோம்.

வேதாகமம் சொல்கிறது, “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (பார்க்கவும், எரேமியா 29:11)

நாம் இவ்வசனத்தை மீண்டும் மீண்டும் தியானித்துக் கொண்டிருக்கிறோம். ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்கள் மிகவும் நன்மையானவைகள், நிறைவேற்றப்படுபவைகள் மற்றும் நிறைவானவைகளாகும்.

ஆனால், சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் சோதனைகள் நம்மை மிகுந்த வேதனை நிறைந்த சூழ்நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. சில நேரங்களில் வியாதி, அநீதி, உடைந்து போகும் திருமண வாழ்க்கை அல்லது நாம் நேசிப்பவர்களின் பிரிவு ஆகியவற்றில் நாம் மூழ்கி விடுகிறோம்.

சில நேரங்களில், “ஆண்டவரே நீர் எங்கே இருக்கிறீர்?” என்று தேடுமளவிற்கும் இருக்கிறோம்.

வேதாகமம் நமக்குச் சொல்கிறது, “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19)

இன்று ஆண்டவர் காற்புள்ளியை மட்டுமே வைக்கும் இடத்தில் முற்றுப்புள்ளியை வைக்காதீர் என, நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.

அவர் உங்களை விடுவிப்பவர். உங்கள் வாழ்வில் காயங்கள் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களுக்கு அப்பால் அவரால் பார்க்க முடியும். உங்களுக்கு ஒரு பாதையை அவரால் உருவாக்க முடியும். உங்கள் விதி தீமையில் முடிவது அல்ல. சிலநேரங்களில், அவருடைய திட்டங்களுக்குள் பிரவேசிக்க நமக்கு உதவும்படி, அவர் இதைப் பயன்படுத்தலாம்.

அவர் உங்கள் வாழ்க்கையில் ஒரு காற்புள்ளியை (,) வைத்திருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “பின்னர்”… என்ற வார்த்தையை உங்கள் தற்போதைய நிலைமையில் சேர்த்துள்ளார், அதாவது, இன்னும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். என் நண்பனே/தோழியே தொடர்ந்து முன்னேறிச் செல்.

உன்னை ஆறுதல்படுத்தி, உன்னை நம்புகிற ஒரு ஆண்டவர் இருக்கிறார்!

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19)

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

இந்த திட்டத்தில் எரேமியா 29:11ல் உள்ள வசனத்தை நாம் ஆழமாக தியானிக்க துவங்குவோம். வேதாகமத்திலேயே நான் மிகவும் நேசிக்கும் ஒரு வசனம் தான் இது. "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தில் நாம் இன்னும் அதிகமாக வளர, இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படித்து அதிலிருந்து போதனைகள் மற்றும் விதிமுறைகளைப் பெற்றுக்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=godsplan