ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?மாதிரி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

6 ல் 5 நாள்

ஆண்டவரில், உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை இருக்கிறது!

எரேமியா 29:11ஐத் தழுவிய தியானத்தை இன்று நாம் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.

இன்று நம்பிக்கையைப் பற்றி பேசுவோம்.

வேதாகமம் கூறுகிறது, “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (பார்க்கவும், எரேமியா 29: 11)

நம்பிக்கை (hope)… இது நம்முடைய வாழ்க்கையில் மிகவும் விலையேறப்பெற்றது. அவர் நம்பிக்கையை நமக்குள் வைக்கும்பொழுது, நாம் ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருந்து அதைப் பெற்றுக் கொள்கிறோம்.

இன்று, நம்பிக்கை அளிப்பவராகிய கர்த்தரிடத்தில் ஜெபம் செய்ய நான் உங்களை அழைக்கிறேன்.

நாம் இணைந்து ஜெபம் செய்வோம்:

“இயேசுவே, உம் நிமித்தம் என் எதிர்காலத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதற்காக நன்றி.

உம்முடைய நோக்கங்களை நான் நம்புவதால் நான் உம்மிடம் வருகிறேன்.

நீர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல;

என் எதிர்பார்ப்புகளுடன் விளையாடி இறுதியில் என்னைக் கீழே விழத் தள்ளுகிற ஒரு மனுபுத்திரனும் அல்ல.

நீர் உண்மையுள்ள ஆண்டவர் என்பதால் நான் உம்மை நம்புகிறேன்.

நீர் உம்முடைய வாக்கினால் சொன்னதை உம்முடைய கரத்தினால் நிறைவேற்றுகிறீர்.

நீர் என் இருதயத்தை அறிவீர், உம்மைப் பின்பற்றுவது என் விருப்பம்.

பாதுகாப்பான இடமாகிய பரலோகத்திற்கு என்னை வழி நடத்திச் செல்வீர் என்பதை அறிந்திருக்கிறேன்.

என்ன நடந்தாலும் சரி, நான் முன்னேறிச் செல்வேன்!

உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை... என் முடிவில்லாத நம்பிக்கை நீரே!

நீரே என் நம்பிக்கை என நான் இன்று அறிக்கையிடுகிறேன்.

இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?

இந்த திட்டத்தில் எரேமியா 29:11ல் உள்ள வசனத்தை நாம் ஆழமாக தியானிக்க துவங்குவோம். வேதாகமத்திலேயே நான் மிகவும் நேசிக்கும் ஒரு வசனம் தான் இது. "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தில் நாம் இன்னும் அதிகமாக வளர, இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படித்து அதிலிருந்து போதனைகள் மற்றும் விதிமுறைகளைப் பெற்றுக்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=godsplan