கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்மாதிரி
இருளுக்கு எதிராக போரிடுதல்
பைபிள் கதை – பவுல் மற்றும் சிலாஸ் சிறையில் இருத்தல் அப்போஸ்தலர் 16:16-31
நாம் மனிதர்களுக்கு எதிராக சண்டையிட கூடாது ஆனால் சாத்தான் மற்றும் அவரது இருளின் ஆட்சிக்கு எதிராக சண்டையிட வேண்டும். சாத்தானானது தவறான புரிதல்களை உருவாக்க விரும்புகிறது, மேலும் மக்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ளவும் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறது, ஆனால் நமது போர் எப்போதுமே அதற்கு எதிரானதுதான் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்! நமது உலகமானது ஒரு விழுந்த இடம், மனிதர்களாக, நாம் அடிக்கடி ஒருவருக்கு எதிராக ஒருவர் பாவம் இணைத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும், ஏனெனில் அது எதிரியின் சூழ்ச்சிப் பொறியில் நம்மை விழுந்திட செய்திடும்.
நாம் தவறுகளை இழைத்தாலும்கூட ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். நாம் ஒரு தவறை செய்யும் போது, ஆண்டவரின் கருணை நமது வாழ்வில் இருப்பதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும், எனவே நாம் எப்போதும் மற்றவர்களிடம் கருணை கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் எதிரி நமது வார்த்தைகள் அல்லது செயல்களில் திரித்திடக்கூடும், எனவே நாம் ஒருவருக்கொருவர் மிகவும் கோபத்துடன் நடந்துகொள்வோம். எனினும், ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார், நாமும் அவ்வாறே இருக்க வேண்டும்.
இன்றைய அப்போஸ்தலர் புத்தகத்தில் இருந்து, பைபிள் கதையாக, பவுல் மற்றும் சிலாஸ் சிறையில் தள்ளப்பட்டதை காண இருக்கிறோம். அவர்கள் எவ்விதமான தவறையும் செய்யாதபோதும் கூட, பாதுகாவலர்கள் அவர்களிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். எனினும், ஆண்டவர் அவர்களுக்கு தப்பிச் செல்வதற்கான ஒரு வழியை கொடுக்கிறார், அவர்கள் பாதுகாவலர்கள் மீது எவ்விதமான பழிவாங்கும் செயலையும் மேற்கொள்ளவில்லை, மாறாக அவர்கள் மீது கருணை கொண்டு, பாதுகாவலரையும் அவரது குடும்பத்தையும் ஆண்டவரை நோக்கி வழிநடத்தினர்! பவுல் மற்றும் சிலாஸ் அந்த பாதுகாவலரின் மீது அவர்களுக்கு எதிராக அவர் நடந்து கொண்ட தீய செயல்களுக்காக குற்றம்சாட்டி இருக்கலாம், ஆனால் அதற்கு மாறாக அவர்கள், அவர்களது போரானது சாத்தானுக்கு எதிரானது என்றும் மற்ற மக்களுக்கு எதிரானது அல்ல என்பதனையும் நினைவில் கொண்டிருந்தனர். நாமும், நாம் மற்ற மனிதர்களுக்கு எதிராக போர் தொடுக்காது, ஆன்மீக இருளுக்கு எதிராக போராட, ஆண்டவரின் கவசத்தை அணியும்போது இதனை கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்!
"நான் எதிரிக்கு எதிராக போர் தொடுப்பதை தேர்வு செய்கிறேன், என்னை சுற்றி இருக்கும் மக்களுக்கு எதிராக அல்ல."
கேள்விகள்
1. இந்த வார்த்தைகள் என்ன அர்த்தத்தை கொடுக்கின்றன? "இந்த இருள் உலகத்தையும் தீய ஆன்மீக விசைகளையும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆற்றல்கள், அதிகாரங்கள் மற்றும் ஆற்றல்கள்." எபேசியர் 6:12
2. இருளிற்கு எதிராக போர் செய்வதற்கு மாறாக மனிதர்களுக்கு எதிராக போர் செய்யும்போது ஏற்படக்கூடியவை குறித்த சில உதாரணங்கள் யாவை?
3. ஆண்டவரின் கவசம் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஏன் ஆண்டவர் விரும்புகிறார்?
4. சிறைச்சாலையில் போடபடுவதற்கு முன்னர் பவுல் மற்றும் சிலாஸிற்கு வலி தரக்கூடிய என்ன விஷயம் நிகழ்ந்தது?
5. "காக்கப்படுவதற்காக நான் என்ன செய்யவேண்டும்?" என்ற சிறைக்காவலரின் கேள்விக்கான பதில் யாது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஆண்டவரின் கவசத்தை அணிந்துகொள்ளுதல் என்பது அன்றாடம் காலை செய்ய வேண்டிய பிரார்த்தனை சடங்கு அல்ல, ஆனால் அது இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டிய ஒரு வாழ்வியல் முறை ஆகும். கிறிஸ்டி கிராஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வாசிப்பதற்கானத் திட்டமானது, அப்போஸ்தலர் புத்தகத்தின் கதாநாயகர்களைக் காண்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய Equip & Grow க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.childrenareimportant.com/tamil/armor/