கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்மாதிரி
விசுவாசத்தின் கவசம்
பைபிள் கதை - பவுல் மற்றும் கப்பல் விபத்து (அப்போஸ்தலர் 27: 21-37, 28: 1)
இன்று நாம், நம்மை காத்துக் கொள்வதற்கான மிகச்சிறந்த ஆயுதமான, விசுவாசத்தின் கவசத்தை குறித்து கற்றுக்கொள்கிறோம், ஏனெனில் நாம் அதனை நகர்த்தி குறிப்பிட்ட தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தீய சக்தியிடமிருந்து வரக்கூடிய எரிந்து கொண்டிருக்கும் அம்புகளை அணைப்பதற்கு நாம் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பைபிள் கூறுகிறது. அது "ஒருவேளை" அம்புகள் வந்தால் என்று கூறுவதில்லை, ஆனால் அவை "வரும்போது" நாம் அவற்றிற்கு எதிராக ஆற்றலின்றி இருந்திடக்கக்கூடாது. உண்மை என்னவெனில் எதிரி நம்மை தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கிறான்.
உங்கள் எதிரி எரிந்து கொண்டிருக்கும் அம்புகளின் மூலம், உங்களை திசை திருப்பவும், ஆச்சரியப்படுத்தவும் விரும்புகிறான். அவன் அவனது குறியை குறிப்பாக உங்களுக்காக வடிவமைத்திருக்கிறான். அவன் உங்களது பழக்கவழக்கங்கள், உங்களது ஆழமான பயம் மற்றும் பலவீனங்கள் ஆகியவற்றைப் படித்தறிந்து, அந்தப் பகுதிகளில் குறிப்பாக அம்புகளை குறி வைத்திருக்கிறான்.
விசுவாசம் என்பது நம்மால் ஆண்டவரின் ஆன்மீக ராஜ்யத்தை காண முடியாத போதும்கூட, அவரிலும், அவரது வாக்கிலும் நம்பிக்கை கொண்டிருப்பது. நம்மால் காணமுடியாத போதும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், மேலும் அதுதான் நமது மனதில் இருக்கும் விசுவாசம். நாம் விசுவாசம் கொண்டிருக்கையில், எதிரியின் இந்த நேரடியான தாக்குதல்களை நம்மால் தோற்கடிக்க முடியும்.
அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து இன்றைய பைபிள் கதையில், பவுல் ஒரு மிகப்பெரிய புயலின் போது கடலில் இருக்கிறார், ஆண்டவர் அவரிடம் புயலினால் யாரொருவரும் இறக்க மாட்டார் என்று கூறுகிறார்! பவுல் தன்னுடன் பேசிய ஆண்டவரின் மேல் நம்பிக்கை கொள்வதை தேர்வு செய்கிறார், அவரால் ஆண்டவரை காண முடியாத போதும் கூட. அடுத்து பவுல் அனைவரிடமும் ஆண்டவர் தன்னிடம் கூறியதை காண்பது மிகவும் ஆர்வமாக இருந்தது, மேலும் அவர், வலிமைகொள்வதற்காக அவர்களை மிக அதிகளவு உணவையும் எடுத்துக் கொள்ளச் செய்தார். பவுல் ஆண்டவரின் மீது நம்பிக்கை கொள்வதை மட்டும் செயல்படுத்தவில்லை, ஆனால் ஆண்டவரின் செய்தியை மற்றவர்களிடம் வெளிப்படையாக வெளிப்படுத்துவதில் ஆர்வத்துடனும், மேலும் அவரது செய்தியின்பால் நடந்து கொள்ளவும் செய்தார்! ஒருவேளை யாரேனும் அந்த கப்பல் விபத்தினால் இறந்திருக்கும் பட்சத்தில், அவர் மிக அதிகமாக சங்கடம் அடைந்திருப்பார். சில நேரங்களில் நாமும் மனிதர்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கு மாறாக, ஆண்டவரின் மேல் நம்பிக்கை கொண்டு, அவரது வாக்கை பொதுவில் எடுத்துச்செல்ல வேண்டிய தேவையில் இருக்கக்கூடும். நீங்கள் காண முடியாத ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொண்டு, நீங்கள் உங்களது விசுவாசத்தின் கவசத்தை எடுத்துக் கொள்வீர்களா? இவ்வாறுதான் நீங்கள் உங்களது எதிரிக்கு எதிராக வெற்றி கொள்ளவும், அவனது எரியும் அம்புகளை அணைக்கவும் முடியும்!
"நான் ஆண்டவரின் மீது நம்பிக்கையும், விசுவாசமும் கொள்வதை தேர்வு செய்கிறேன்."
கேள்விகள்
1. நிகழ்கால வாழ்க்கையில், "தீய சக்தியின் தீவிரமான அம்புகள்" யாவை?
2. நமது சாதாரண வாழ்க்கையில், உங்களது விசுவாசத்தின் கவசத்தை கொண்டு நீங்கள் எவ்வாறு அம்புகளை திசைதிருப்ப முடியும் என்பதனை காண்பிக்கும் ஒரு குறிப்பிட்ட உதாரணம் யாது?
3. உங்களது விசுவாசம் இல்லாமல் நீங்கள் உங்களது வீட்டை விட்டு வெளியேறுவதில்லை என்பதை உறுதி செய்ய நீங்கள் என்ன செய்வீர்கள்?
4. இன்றைய பைபிள் கதையில், பவுல் கப்பலில் எங்கு சென்று கொண்டிருந்தார்?
கப்பலில் எத்தனை நபர்கள் இருந்தனர்?
5. கப்பல் சேதமடைந்து விடும் ஆனால் யாரும் புயலின் காரணமாக இறந்து போக மாட்டார்கள் என்று பவுல் எவ்வாறு அறிந்து கொண்டார்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஆண்டவரின் கவசத்தை அணிந்துகொள்ளுதல் என்பது அன்றாடம் காலை செய்ய வேண்டிய பிரார்த்தனை சடங்கு அல்ல, ஆனால் அது இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டிய ஒரு வாழ்வியல் முறை ஆகும். கிறிஸ்டி கிராஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வாசிப்பதற்கானத் திட்டமானது, அப்போஸ்தலர் புத்தகத்தின் கதாநாயகர்களைக் காண்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய Equip & Grow க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.childrenareimportant.com/tamil/armor/