கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்மாதிரி

கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்

10 ல் 9 நாள்

ஆன்மாவின் வாள்

பைபிள் கதை – பேதுரு கூட்டத்தோடு பேசுகிறார் (அப்போஸ்தலர் 2: 12-17, 22-30, 34-41)

கவசத்தின் முதல் துண்டானது ஆன்மாவின் வாளாகும், அதுதான் ஒரு பாதுகாப்புப்பொருள் என்பதற்கு மாறாக, உண்மையில் ஒரு ஆயுதமாகும். இதன் பொருள் அதனைக் கொண்டு எதிரிக்கு எதிராக நாம் தாக்குதல் நடத்த முடியும் என்பதாகும். "ஆன்மாவின் வாள்" என்பது பைபிள் அல்லது ஆண்டவரின் வாக்கு ஆகும். போர்க்களத்தில் உங்கள் வாளை நீங்கள் பயன்படுத்துவதற்கு, உங்களுக்கு வேதம் தெரிந்திருக்க வேண்டும். இதன் பொருள் உங்களது மொத்த பைபிளையும் மீண்டும் மீண்டும் படித்து அனைத்து பைபிள் வசனங்களையும் நீங்கள் மனப்பாடம் செய்யவேண்டும் என்பதாகும்.

அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து இன்றைய உண்மையான கதையில், பேதுரு ஒரு பெரும்கூட்டத்திற்கு போதிக்க வேதத்தை பயன்படுத்தினர் என்பதனை காணவிருக்கிறோம். ஆண்டவரின் மீது நம்பிக்கை கொள்ளாமல் அவரை கேலி செய்யத் தொடங்கியிருந்த மக்கள் இருந்தனர். அவ்வாறு கேலி செய்தவர்கள் முன் எழுந்து நின்று, பேதுரு பேச எண்ணினார்; அவர் அவர்களுக்கு போதனை மட்டும் வழங்கவில்லை, ஆனால் போர்க்களத்தில் போர் செய்வதற்கான வேதத்தையும் பயன்படுத்தினார். நாம் வேதத்தை மனனம் செய்து இருக்கும்போது, தேவைப்படும் இடத்தில் நாம் நமது வாழ்வில் அதனை பயன்படுத்தலாம். ஆண்டவரின் வாக்கைக் கொண்ட பேதுருவின் போதனையால் அன்றைய நாளில் 3000 மக்கள் காக்கப்பட்டு, திருச்சபையில் இணைந்தனர்! என்ன ஒரு ஆசீர்வாதம்! பேதுரு அவரது வாளை திறனுடன் பயன்படுத்தினார், ஏனெனில் அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கான கச்சிதமான வேதத்தை அவர் மனனம் செய்திருந்தார். அவர் எதிரிக்கு எதிராக திறனுடன் போரிட்டு, ஆண்டவருக்கு 3000 மக்களை வெற்றியாக கொடுத்தார்! நீங்கள் எந்த அளவு அதிகமாக பைபிள் வசனங்களை அறிந்திருக்கிறீர்களோ, அந்த அளவு உங்களது வாளின் மூலம் நீங்கள் நன்மை பெறுவீர்கள். நாம் வாக்கை படித்து அதனை மனப்பாடம் செய்யும் போது, நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஆண்டவர் அதனை நமக்கு நினைவூட்டுகிறார். உங்கள் வாளுடன் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்?

"நான் ஆண்டவரின் வாக்கைக் கற்றுக் கொள்வதையும், அதனை எனது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதையும் தேர்வு செய்கிறேன்."

கேள்விகள்

1. எதிரிக்கு எதிராக நீங்கள் எப்போது தாக்குதல் நடத்த முடியும்?

2. உங்களது நிஜ வாழ்க்கையில் நீங்கள் வாளை பயன்படுத்தியதற்கான ஒரு எடுத்துக்காட்டு யாது?

3. ஆன்மாவின் வாள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது?

4. பெந்தேகோஸ்தே நாளில் ஜெருசலத்தில், பேதுரு கூறிய விஷயங்களினால் எத்தனை மக்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்?

5. இந்த புதிய கிறிஸ்தவர்கள் தாங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றப்போகிறோம் என்பதனை காண்பிக்க என்ன செய்தனர்?

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்

ஆண்டவரின் கவசத்தை அணிந்துகொள்ளுதல் என்பது அன்றாடம் காலை செய்ய வேண்டிய பிரார்த்தனை சடங்கு அல்ல, ஆனால் அது இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டிய ஒரு வாழ்வியல் முறை ஆகும். கிறிஸ்டி கிராஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வாசிப்பதற்கானத் திட்டமானது, அப்போஸ்தலர் புத்தகத்தின் கதாநாயகர்களைக் காண்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய Equip & Grow க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.childrenareimportant.com/tamil/armor/