கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்மாதிரி

கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்

10 ல் 4 நாள்

உண்மையின் பெல்ட்

பைபிள் கதை - அனனியாஸ் மற்றும் சபீரா (அப்போஸ்தலர் 5: 1-10 )

எபேசியர் அத்தியாயம் 6 இல் குறிப்பிடப்பட்டிருக்கும் கவசத்தின் முதல் துண்டானது, உண்மையின் பெல்ட் ஆகும், இதனை ஒட்டுமொத்த கவசத்தையும் ஒன்றிணைத்து

பிடித்துக்கொள்ள உதவுவதற்காக வீரராகவர் தனது இடுப்பு பகுதியை சுற்றிலும் அணிந்து கொள்ள முடியும். இது கவசத்தை வீரரின் மீது பிடித்துக் கொள்ளும், வாளை சரியான இடத்தில் பிடித்துக் கொள்ளும், மேலும் இதுதான் வீரரானவர் தான் உடலிலிருந்து எடுக்காத ஒன்றாகும். உண்மையில், ஒருவேளை ஒரு வீரரிடம் உண்மையின் பெல்ட் இல்லாதபட்சத்தில், அவரது ஆடைகூட கீழே விழுந்துவிடலாம், அதனால் அவர் அனைவரின் முன்னிலையிலும் சங்கடத்திற்கு உள்ளாவார்!

உண்மையின் ஒரு பகுதியானது என்னவெனில், நமது வாய்வழியே வரக்கூடிய வார்த்தைகள் ஆகும். நாம் உண்மையை மட்டுமே பேசக்கூடிய கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும், நமது பெற்றோரிடமோ அல்லது ஆண்டவரிடமோ பொய்யுரைக்க கூடாது. ஆனால் உண்மையின் பெல்ட்டின் மற்றொரு பகுதியானது, நாம் ஆண்டவரையும் அவரது வாக்கையும் நம்புவதை தேர்வு செய்வதில் இருக்கிறது. நிதர்சனம் என்னவெனில், நமது எதிரியான சாத்தான் எப்போதும் பொய்யுரைக்கவும், உண்மை இல்லாத விஷயங்களை நாம் நம்பும்படி நம்மை கையாளவும் முயற்சிக்கும் என்பதுதான்.

இன்றைய பைபிள் கதையில், அனனியாஸ் மற்றும் சபீரா, ஒருவேளை அவர்கள் சீடர்களிடம் நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் முக்கியமற்ற ஒரு பொய்யை நம்புகின்றனர். தங்களது சொத்தை அவர்கள் உண்மையில் பெற்றதை விட குறைந்த பணத்திற்கு விற்றதாக நடிக்கின்றனர். அவர்கள் எதிரியின் மீது நம்பிக்கை கொண்டு. ஆண்டவரால் அவர்களை காண முடியாது அல்லது விற்பனையின் விவரங்களை அறிந்து கொள்ள முடியாது என்று எண்ணினர். ஆனால் ஆண்டவர் அனைத்தையும் காண்கிறார். சீடர்கள் ஆண்டவரின் பிரதிநிதிகள் ஆவர். அவர்கள் சீடர்களிடம் பொய்யுரைத்ததினால், ஆண்டவரிடம் பொய்யுரைத்தவர் ஆகின்றனர். அவர்கள் தங்களது விற்பனை குறித்த உண்மையை மறைத்தனர் ஏனெனில் சாத்தான் அவர்களது காதுகளில் கூறிய பொய்களை அவர்கள் நம்பினர். உங்களது கவசமானது கீழே விழுந்து போகும் அளவிற்கான எவ்வகையான பொய்களை நீங்கள் நம்புகிறீர்கள்? எப்போதும் உண்மையை கூறிக்கொண்டும், எப்போதும் ஆண்டவர் மற்றும் அவரது வாக்கின் உண்மையில் நம்பிக்கை கொண்டும், நாம் உண்மையின் பெல்ட்டை அணிந்து கொள்வது முக்கியமாகும்.

"நான் நேர்மையுடன் வாழ்வதை தேர்வு செய்கிறேன்."

கேள்விகள்

1. நீங்கள் நேர்மையாக இல்லாதபட்சத்தில், உங்களது உண்மையின் பெல்ட் என்னவாகும்? இது உங்களது கவசத்தின் மற்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துமா?

2. நீங்கள் 'பொய்' உரைக்காத, ஆனால் 'நேர்மையாக' நடந்து கொள்ளாத ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை யாது?

3. பொய்யுரைப்பதன் விளைவு யாது?

4. அனனியாவும், சப்பிராவும், பீட்டரிடம் மூன்று மணிநேரங்கள் கழித்து பேசிய போதும், அவர்களது சொத்தை விற்பனை செய்தது குறித்த அதே கதையை எவ்வாறு கூறினர்?

5. அனனியாவும் சப்பிராவும் யாரிடம் பொய் உரைத்தனர்?

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்

ஆண்டவரின் கவசத்தை அணிந்துகொள்ளுதல் என்பது அன்றாடம் காலை செய்ய வேண்டிய பிரார்த்தனை சடங்கு அல்ல, ஆனால் அது இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டிய ஒரு வாழ்வியல் முறை ஆகும். கிறிஸ்டி கிராஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வாசிப்பதற்கானத் திட்டமானது, அப்போஸ்தலர் புத்தகத்தின் கதாநாயகர்களைக் காண்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய Equip & Grow க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.childrenareimportant.com/tamil/armor/