கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்மாதிரி
உங்களது நிலையில் நின்றிடுங்கள்
பைபிள் கதை - ஸ்டீபனின் இறப்பு அப்போஸ்தலர் 6:8-15, 7:51-60
நாம் ஆண்டவரின் கவசம் மற்றும் அப்போஸ்தலரின் புத்தகத்தை படிக்கையில், நாம் வாழும்போது ஆண்டவரின் கவசத்தை அணிந்து கொள்வதும் முக்கியம் என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகும். நீங்கள் உங்களது உண்மையின் பெல்ட்டை அணிந்து கொள்வதற்காக பிரார்த்திக்க முடியாது. உங்களது வாயினால் நீங்கள் உண்மையை சொல்லும் பட்சத்தில், உங்களது மனதினால் உண்மையின் ஆண்டவரை நம்பும்பட்சத்தில், உங்களது உண்மையின் பெல்ட் உங்களுடன் இருக்கும். நீங்கள் உங்களது விசுவாசத்தின் கவசத்தை எடுத்துக் கொள்ளவும் பிரார்த்திக்கத் தேவையில்லை. நீங்கள் சக மனிதர் சொல்வதை நம்பாமல், ஆண்டவர் சொல்வதை நம்பியும், விசுவாசத்துடன் வாழும் பட்சத்தில், உங்களது கையிலேயே நீங்கள் உங்களது விசுவாசத்தின் கவசத்தை பெற்றிடுவீர், மேலும் அதைக் கொண்டு நீங்கள் எதிரிக்கு எதிராக உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இதே கோட்பாடுதான் உங்களது நிலைப்பாட்டில் நீங்கள் நிற்பதற்கும் பொருந்தும். நீங்கள் உங்களது நிலையில் இருப்பதற்காக குறிப்பிட்ட சொற்களை பயன்படுத்தி பிரார்த்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் ஆண்டவரை நம்பி, விட்டுக்கொடுக்க மறுக்கும் போது, நீங்கள் உங்களது நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்.
அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து இன்றைய பைபிள் கதையில் வரும் ஸ்டீபன், நமக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவர் நேர்மையான மற்றும் புத்திசாலியான மனிதர், அவர் தொடர்ந்து தனது கவசத்தை அணிந்து கொண்டிருந்தார். மத எதிர்ப்புகள் அவருக்கு எதிராக எழுந்த போதும், அவருக்கு அதனால் இறப்பு நேரும் என்று அறிந்திருந்தும் கூட, அவர் தான் நம்பிய விஷயத்தில் நிலைத்து நின்றார்.
மத தலைவர்கள் அவர்மீது இயேசு பிரானை அவர் பிரசங்கம் செய்வதற்காக மிகவும் கோபத்தில் இருந்தனர், அவர்கள் கூட்டத்தினிடையே வன்முறையை தூண்டி, ஸ்டீபன் சாகும் அளவிற்கு கல்லால் அவரை அடிக்க மக்களை தூண்டிவிட்டனர். இந்த ஒட்டுமொத்த பைபிள் கதை முழுவதும், ஸ்டீபன், அவர் நம்பியதில் நிலைத்திருந்தார், பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நீங்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு அதற்காக துன்பப்படவும் தயாராகும்போது, நீங்கள் உங்களது நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் ஆண்டவரின் ஒட்டுமொத்த கவசத்தையும் அணிந்து கொண்டு நிலைத்து நிற்கிறீர்கள்!
"நான் நிலைத்திருப்பதை தேர்வு செய்கிறேன்."
கேள்விகள்
1. மனித வாழ்வின் மேடுபள்ளங்கள் யாவை?
2. சாத்தானுக்கு எதிராக நாம் எப்போது நிற்க வேண்டும்?
3. நாம் நிலையாக நிற்பதற்கு தேவைப்படும் மிக முக்கியமான செயல் யாது?
4. யார், தான் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட போதும், தேவதை போல தனது முகத்தை கொண்டிருந்தார்?
5. இறப்பதற்கு முன்னர் அவர் என்ன கூறினார்?
இந்த திட்டத்தைப் பற்றி
ஆண்டவரின் கவசத்தை அணிந்துகொள்ளுதல் என்பது அன்றாடம் காலை செய்ய வேண்டிய பிரார்த்தனை சடங்கு அல்ல, ஆனால் அது இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டிய ஒரு வாழ்வியல் முறை ஆகும். கிறிஸ்டி கிராஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வாசிப்பதற்கானத் திட்டமானது, அப்போஸ்தலர் புத்தகத்தின் கதாநாயகர்களைக் காண்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய Equip & Grow க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.childrenareimportant.com/tamil/armor/