கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்மாதிரி
இரட்சிப்பின் தலைக்கவசம்
பைபிள் கதை – சவுலின் மாற்றம் (அப்போஸ்தலர் 9: 1-19)
நான் நமது இரட்சிப்பின் தலைக்கவசத்தை அணிந்து கொள்வது முக்கியமானதாகும், ஏனெனில் நமது தலையில் அடிபடும்போது அது நம்மை இறக்கக்கூட செய்திடலாம். நமது தலைக்கவசத்தை அணிந்து கொள்வதை நாம் எவ்வாறு உறுதிசெய்து கொள்வது? நமது இரட்சிப்பானாது, சிலுவையில் இயேசுபிரானின் நிறைவுபெற்ற பணியின் அடிப்படையில் இருப்பதாக பைபிள் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவர் நமது பாவங்களுக்காக இறந்தபோது, அவர் விலை கொடுத்து நமது இரட்சிப்பை பெற்றிருக்கிறார்! நாம் நல்ல விஷயங்களுக்காக மட்டும் சொர்க்கத்தின் வழியை அடைந்திடமுடியாது, ஆனால் இயேசு கிறிஸ்துவை நம்புவதால் மட்டுமே, நாம் காக்கப்படுவோம். நமது இரட்சிப்பின் தலைக்கவசங்களை அணிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் ஒரு விழா போன்ற பிரார்த்தனையை செய்ய வேண்டிய தேவை இல்லை. நமது இரட்சிப்புக்காக நாம் ஆண்டவரான இயேசுபிரான் மீது நம்பிக்கை கொள்ளும் பட்சத்தில், நாம் நமது தலைக்கவசத்தை அணிந்து இருப்போம்!
அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து இன்றைய பைபிள் கதையில், ஆண்டவர் சவுலுக்கு அதிசயமான வழியில் காட்சியளித்ததை குறித்து காணவிருக்கிறோம். சவுல், பின்னர் பவுல் என்று அழைக்கப் பெற்றவர், கிறிஸ்தவராக வேடம் தரித்து அவர்களை துன்பப்படுத்தி வந்தார். ஒருநாள் டமாஸ்கஸ் செல்லும் சாலையில், இயேசுபிரான் திடீரென சவுலின் முன்னே, சொர்க்கத்திலிருந்து வரும் ஒரு ஒளியாகத் தோன்றினார், பார்வை இழந்த நிலையில் சவுல் தரையில் விழுந்தார். மூன்று நாட்கள் கழித்து, ஆண்டவர் ஒரு கிறிஸ்தவரை அனுப்பி அவரை குணமாக்கி, அவரை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துவரச் செய்தார். அந்த வாரம் சவுல் இயேசுபிரானில் நம்பிக்கை கொண்டார், எனவே காக்கப்பட்டார்! நீங்கள் உங்கள் இரட்சிப்புக்காக ஆண்டவரான, இயேசுபிரானில் நம்பிக்கை கொண்டு பிரார்த்திக்கும் பட்சத்தில், பவுல் செய்ததைப் போல, இன்று நீங்கள் உங்களது இரட்சிப்பின் தலைக்கவசத்தை அணிந்து கொள்ளலாம்.
என்னுடன் பிரார்த்தியுங்கள், "அன்புள்ள இயேசுபிரானே, நான் பாவம் இளைத்தவன் என்றும், சிலவற்றை தவறாக செய்திருக்கிறேன் என்பதையும் ஏற்கிறேன். எனது பாவங்களுக்காக நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு, இறந்தீர்கள் என்பதையும், நீங்கள் மெய்யானவர் என்பதையும் நான் நம்புகிறேன். உங்களை எனது பிரபுவும், காப்பாளராகவும் மனதளவில் இன்று நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னை ஏற்றுக் கொண்டதற்கும், நேசிப்பதற்கும், சொர்க்கத்தில் உங்களுடன் நித்திய வாழ்வை எனக்கு அளிப்பதற்கும், நன்றிகள்!”
"நான் என் இரட்சிப்புக்காக ஆண்டவரான இயேசுபிரான் மீது நம்பிக்கை கொள்வதை தேர்வு செய்கிறேன்."
கேள்விகள்
1. உங்களது இரட்சிப்பு கொடுத்து நீங்கள் உறுதியாக இருக்க முடியுமா?
2. நீங்கள் உங்களது இரட்சிப்பை இழக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
3. சவுல், தனது குதிரையின் மூலம் டமாஸ்கஸ் நகரை நோக்கி சென்ற போது என்ன நடந்தது?
4. டமாஸ்கஸை சார்ந்த அனனியாவிடம் ஆண்டவர் என்ன கூறினார்?
5. அனனியா ஆண்டவரிடம் என்ன கூறினார்? நாம் ஆண்டவரிடம் புகார் அளிக்கும் போது என்ன நடக்கும்?
Please take your time through the formatting process, which includes final edits and revisions. Great content - written well, reviewed well, and published well - benefits both you and our growing community.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஆண்டவரின் கவசத்தை அணிந்துகொள்ளுதல் என்பது அன்றாடம் காலை செய்ய வேண்டிய பிரார்த்தனை சடங்கு அல்ல, ஆனால் அது இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டிய ஒரு வாழ்வியல் முறை ஆகும். கிறிஸ்டி கிராஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வாசிப்பதற்கானத் திட்டமானது, அப்போஸ்தலர் புத்தகத்தின் கதாநாயகர்களைக் காண்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய Equip & Grow க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.childrenareimportant.com/tamil/armor/