கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்மாதிரி

கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்

10 ல் 5 நாள்

நேர்மைக்கான மார்புக் கவசம்

கொர்னேலியஸ் (அப்போஸ்தலர் 10: 9-23 )

அத்தியாயம் 6 ல் இருந்து, ஆண்டவரின் கவசத்திற்கான அடுத்த துண்டானது, நேர்மையான மார்புக்கவசம் ஆகும். நேர்மையாக இருத்தல் என்பது ஆண்டவரின் கதாபாத்திரத்தை காண்பிப்பது, அல்லது எது சரியோ நல்லது மற்றும் விசுவாசமிக்கது. ஆண்டவரின் முன்னிலையில் எது சரியானதோ அதனை நாம் தொடர்ந்து செய்யும் செயல்தான், நமது மார்புக் கவசத்தை சரியான இடத்தில் வைத்திருக்கும். ஆண்டவர் நம்மிடம் வேதாகமத்தில், நாம் புத்திசாலித்தனமாகவும், சரியான விஷயத்தை செய்பவராகவும் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். நாம் அவ்வாறு செய்யும் போது, நாம் நமது மார்புக் கவசத்தை கொண்டிருக்கிறோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம், மேலும் நமது மனமானது போர்க்களத்தில் நாம் இருக்கும் போது முழுமையான பாதுகாப்பில் இருக்கும். மார்புக் கவசம் குறித்த மிக முக்கியமான மற்றொரு விஷயம் உள்ளது, அது நமது முக்கிய உறுப்பான இதயத்தை பாதுகாக்கிறது, முன்பக்கம் இருந்து மட்டும்தான். நாம் அதை அணிந்து கொள்ளும்போது, நமக்கு காயம் ஏற்படலாம் ஆனால் நம்மால் எழுந்து தொடர்ந்து செயல்பட முடியும். எனினும், நாம் போர்க்களத்தை தொடர்ந்து எதிர்கொள்வது தேவையாகும் ஏனெனில், மார்புக் கவசமானது முன்புறத்தை மட்டுமே பாதுகாக்கிறது. நாம் திரும்பி இருந்தாலும், பின்வாங்கி ஓடினாலும், அது நம்மை பாதுகாக்காது.

ஆண்டவரின் குணாதிசயம் மற்றும் நேர்மை என்றால் என்ன? நாம் அதை கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? கொர்னேலியஸ் ஒரு பக்திமான் என்றும், அவர் ஆண்டவருக்கு-அஞ்சிய மனிதர் என்றும், தாராளமானவராகவும், தொடர்ந்து பிரார்த்திப்பவராகவும் இருந்தார் என்று பைபிள் கூறுகிறது. மேலும் அனைத்து யூத மக்களும் அவரை மதித்ததாகவும் பைபிள் கூறுகிறது. நீங்கள் நேர்மையாக இருக்கும் போது மற்றவர்கள் அதனை அறிந்து கொள்வர், ஏனெனில் அது காலப்போக்கில் பார்ப்பதற்கு வெளிப்படையாக தெரிந்துவிடும். கொர்னேலியஸ், நீதிக்கான அவரது மார்புக் கவசத்தை எப்போதும் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில், யூதர்கள் மற்ற மதத்தினர் உடன் இணைந்து இருப்பதோ அல்லது அவர்களை காண வருகை புரிவதோ சட்டத்துக்கு புறம்பானதாகும். (அப்போஸ்தலர் 10:28) ஆண்டவர் பீட்டருக்கு ஒரு நோக்கத்தை அனுப்புகிறார், எனவே அவர் கொர்னேலியஸிடம் சென்று நற்செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கொர்னேலியஸ் ஆண்டவரின் குணம்மிக்க மனிதன், ஆண்டவரானவர், அவரையும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதுகாக்க ஒருவரை (அது சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும்) அனுப்பினார்!

"நான் எப்போதும் சரியான விஷயத்தையே செய்வதை தேர்வு செய்கிறேன்."

கேள்விகள்

1. உங்கள் வாழ்வின் எந்த சூழ்நிலைகளில் நீங்கள் உங்களது நேர்மைக்கான மார்புக் கவசத்தை கொண்டிருந்தீர்கள், எந்த சூழ்நிலைகளில் அதனை கொண்டிருக்காமல் இருந்தீர்கள்?

2. எவ்வாறு நேர்மையானது பொய்யாகப்படும் என்பதை விளக்கவும்.

3. நீங்கள் சங்கடப்பட கூடிய சூழ்நிலையை விட, எதுவும் செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று தேர்வு செய்த சூழ்நிலைகள் யாவை?

4. பீட்டர் யாருடைய வீட்டிற்கு வருகை புரிந்தார்? இது ஏன் வழக்கமற்றதாக இருந்தது?

5. அந்த பகுதியில் இருந்த மற்றவர்களை காட்டிலும் கொர்னேலியஸ் எந்தெந்த வழிகளில் வேறுபட்டவராக இருந்தார்?

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

கடவுளின் கவசம் - அப்போஸ்தலர்களின் செயல்கள்

ஆண்டவரின் கவசத்தை அணிந்துகொள்ளுதல் என்பது அன்றாடம் காலை செய்ய வேண்டிய பிரார்த்தனை சடங்கு அல்ல, ஆனால் அது இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டிய ஒரு வாழ்வியல் முறை ஆகும். கிறிஸ்டி கிராஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வாசிப்பதற்கானத் திட்டமானது, அப்போஸ்தலர் புத்தகத்தின் கதாநாயகர்களைக் காண்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய Equip & Grow க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.childrenareimportant.com/tamil/armor/