கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 5 நாள்

5.தாழ்மையே மேன்மையின் அடையாளம்!

தாவீதும் அவனோடிருந்த 400 பேரும் தங்களுடைய உதவியை உதாசீனப்படுத்தின நாபாலுக்கு தங்களுடைய வீரத்தைக் காண்பிக்க பட்டயத்தை ஏந்தி கோபத்துடன் விரைந்தனர். அவர்களுடைய முகத்தில் கொலைவெறி காணப்பட்டது.

நாபாலும் தாவீதும் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை ஆனால் அதற்குள் தாவீது சென்ற வழியில் அபிகாயில் என்ற ஒரு ஒளி அவனை சந்திக்கிறது.

அபிகாயில் தாவீதைக் கண்டவுடன் தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்தாள் என்று பார்க்கிறோம்.

  1. முதலில் அபிகாயில் தன் கணவனால் ஏற்படுத்தப்படுத்த ஆபத்தை உணர்ந்தவுடன் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல் பட ஆரம்பித்தாள். எத்தனை பெரிய விருந்து ஆயத்தம்பண்ணப்பட்டது என்று நேற்று பார்த்தோம். எவ்வளவு சீக்கிரம் அதை செய்திருந்தால் அவள் தாவீதை வழியிலேயே சந்தித்திருக்க முடியும். ஒரு நொடி கூட வீணாக்காமல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவள் உழைத்ததைப் பார்க்கிறோம்.
  2. இரண்டாவதாக அபிகாயில் தாவீதை நோக்கி விரைந்து சென்றாள் என்று பார்க்கிறோம். பெண்கள் இப்படி ஒரு காரியத்துக்காக ஆண்களை நோக்கி செல்வது அந்த காலப் பழக்கத்தில் இல்லை. ஆனால் வரப்போகிற ஆபத்தைத் தடுக்க வேண்டிய முதல் அடியை அபிகாயிலே எடுக்கிறாள் என்றுப் பார்க்கிறோம். இன்று நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் பகையை அழிக்க நாம் ஏன் முதல் அடியை எடுத்து வைக்கக் கூடாது?
  3. மூன்றாவதாக அவள் தாவீதின் கால்களில் விழுகிறதைப் பார்க்கிறோம். தாவீதுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவள் கொடுப்பதைப்தான் நான் அதில் பார்க்கிறேன். அதை அவன் நாபாலிடம் பெற்றிருக்க வேண்டும். அவன் அந்த மரியாதைக்கு உரியவிதமாகத்தானே நாபாலின் ஊழியரிடம் நடந்து கொண்டான். நாபால் எதை தாவீதுக்கு கொடுக்க மறுத்தானோ அதை அபிகாயில் கொடுப்பதைத்தான் பார்க்கிறோம்.
  4. கடைசியாக அபிகாயில் தாவீதைப் பணிந்து கொண்டாள் என்று பார்க்கிறோம். எத்தனை மக்களின் உயிர் தாவீதின் கைகளில் இருந்தது என்பதை உணர்ந்த அவள் அவனைத் தாழ்மையோடு பணிந்து கொண்டது தவறா? தன்னை சுற்றிலும் உள்ள தன் குடும்பத்தையும், தன் ஊழியரையும் காப்பாற்ற அவள் செய்தது தவறேயில்லை என்றுதான் நினைக்கிறேன். அவள் அப்படி செய்யாதிருந்தால் ஒரு வெடிமலை அல்லவா வெடித்திருக்கும்!

தாழ்மையே புத்திசாலியின் அடையாளம் என்பதற்கு அபிகாயிலே நமக்கு உதாரணம்.

நான் அடிக்கடி மலைப்பகுதிகளில் பிரயாணம் செய்வதுண்டு. மழைக்காலங்களில் பெய்யும் அத்தனை மழை நீரும் வானளாவி நிற்கும் மலைகளில் தங்குவதில்லை. தாழ்மையான பள்ளத்தாக்குகள் தான் மழையின் ஆசீர்வாதத்தை நிறைவாகப் பெருகின்றன.

தாழ்மை என்ற வார்த்தைக்கு நீ கொடுக்கும் அர்த்தம் என்ன?

நிறை குடம் தளும்பாது என்று சொல்வார்கள் அல்லவா? பெருமை உன்னுடைய குறைவைக் காண்பிக்கிறது! தாழ்மையோ உன்னில் காணப்படும் மேன்மையைக் கான்பிக்கிறது!

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com