விசுவாசம் vs பயம்மாதிரி

பயத்தை மேற்கொள்ளும் விசுவாசத்தைத் தேர்ந்தெடுங்கள்!
வரும் நாட்களில் விசுவாசம் மற்றும் பயம் என்ற தலைப்பில் வேத வசனங்களை நான் உங்களுடன் சேர்ந்து ஆராய விரும்புகிறேன் - வேத வாக்கியங்களைத் தியானிக்க ஆயத்தமாய் இருங்கள்! 😉
எபிரெயர் 11:1 விசுவாசத்தை இவ்வாறு வரையறுக்கிறது: "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது."
மேலும், "விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்" என்று வாசிக்கிறோம் (எபிரெயர் 11:3).
மறுபுறம், பயம் என்ற சொல், "தீமையை எதிர்பார்த்தல் அல்லது வரவிருக்கும் ஆபத்து பற்றிய அச்சத்தால் ஏற்படும் வலிமிகுந்த உணர்ச்சி" என்றும் "பயம் என்பது எதிர்காலத்தில் நமக்கு ஏற்படும் தீமை பற்றிய எண்ணத்தைக் குறித்து மனதில் நிலவும் குழப்பம்” என்றும் சொல் அகராதியில் வரையறுக்கப்பட்டுள்ளது.
விசுவாசம் மற்றும் பயம் இரண்டிலும் ஒரு பொதுவான காரியத்தைப் பார்க்கிறோம், இரண்டிலும், (இதுவரை) நம்மால் பார்க்க முடியாத ஒன்றை நாம் எதிர்பார்க்கிறோம். விசுவாசம் என்றால் நன்மையை எதிர்பார்க்கிறோம் என்று அர்த்தம், பயம் என்றால் தீமையை நினைத்து அஞ்சுகிறோம் என்று அர்த்தம்.
"விசுவாசம் மற்றும் பயம் இரண்டுமே நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை உங்களை நம்பச் செய்கிறது. நம்ப வேண்டிய ஒன்றை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்." - பாப் புரோக்டர்
"பயத்தை மேற்கொள்ளும் விசுவாசத்தைத் தேர்ந்தெடு" என்ற வழக்கச் சொல்லை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விசுவாசத்துக்கும் பயத்துக்கும் இடையே எப்போதும் தேர்வுக்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவூட்ட, இது உங்களுக்கு ஒரு பலம் வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது. பயம் நம்மை ஆட்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
வேதாகமத்தில் கிட்டத்தட்ட 70 முறை “பயப்படாதே” என்று நமக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று இயேசுவும் சொல்லி இருக்கிறார் (மாற்கு 5:36).
தாவீதின் அணுகுமுறையும் இதுதான்:
“நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?" (சங்கீதம் 56:3-4)
உங்கள் இதயத்தில் மறைந்திருக்கும் பயங்களை வெளிப்படுத்தும்படி கேட்டு, ஆண்டவரது சமூகத்தில் சிறிது நேரம் ஒதுக்குங்கள், பின்னர் சங்கீதம் 23:4 மற்றும் 27:1 ஆகிய வசனங்களிலிருந்து இந்த ஜெபத்தை ஜெபிப்பதன் மூலம் அவற்றை அவரது பாதத்தில் அர்ப்பணித்துவிடுங்கள்.
“பரலோகத் தகப்பனே, இன்று நான் பயத்தை மேற்கொள்ளும் விசுவாசத்தைத் தேர்ந்தெடுக்கிறேன். இருள் சூழ்ந்த காலத்திலும் நீர் என்னுடன் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீரே என் வெளிச்சமும், என் இரட்சிப்பும், என் கோட்டையுமாய் இருக்கிறீர்; என் வாழ்க்கையில் நீர் இருப்பதால், நான் பயப்பட வேண்டியதில்லை. என் பயங்கள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது நம்மை பயத்திலிருந்து வெளியேறி விசுவாசம் நிறைந்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மற்றும் தேவனுடைய வாக்குத்தங்களின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கையை எப்படி மேம்படுத்துவது? என்பதை பற்றியும் இங்கே நாம் தெளிவாக காணலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-faith-vs-fear
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தனிமையும் அமைதியும்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

மனஅழுத்தம்

மன்னிப்பு என்பது ...

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

இளைப்பாறுதலைக் காணுதல்
