விசுவாசம் vs பயம்மாதிரி

எந்த அளவுக்கு உங்களால் பயமின்றி இருக்க முடியும்?
என்னைப்பொருத்தவரை, சற்றும் பயமில்லாதவர் மற்றும் விசுவாசம் நிறைந்த ஒரு நபர் என் அப்பா, கேரி மென்டஸ் தான். அவர் தன் மதத்தின் மீது அதிக பற்றுள்ளவராய், ஒரு உறுதியான முகமதியராக வளர்ந்தார், பயமில்லாதவர் மற்றும் தனது மதத்தைப் பற்றிய நம்பிக்கையில் அவரை யாராலும் அசைக்க முடியாது. அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபோது, அதே விதத்தில் தீவிரமாகவும் பயமின்றியும் தனது பக்தியை இயேசுவுடனான தனது பயணத்தில் காட்டினார், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
ஒரு முகமதியனாக, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை; நான் எங்கு சென்றாலும் எனது சவப்பெட்டியை சுமந்துகொண்டே செல்கிறேன், நான் யாருக்கு அஞ்சுவேன்?” என்று கூறுவார். அதாவது அவர் தனது நம்பிக்கைகளுக்காக மரிக்க பயப்படவில்லை. ஒரு கிறிஸ்தவ போதகரான பிறகு, அவர் அதே கொள்கையை தனது ஊழியத்திலும் பயன்படுத்தினார். சுவிசேஷப் பயணத்திற்குச் செல்லும்போதெல்லாம், அவர் என் அம்மாவைப் பார்த்து, "நான் உன்னை சில நாட்களுக்குள் சந்திப்பேன், அல்லது நான் உன்னை பரலோகத்தில் சந்திப்பேன்" என்று கூறுவார்.
இதேபோல், வேதாகமத்தில், எஸ்தர் ராஜாத்தி தனது மக்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுக்கவும் பயப்படவில்லை. “சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்" என்று அவள் சொன்னாள். (எஸ்தர் 4:16)
இந்த சம்பவங்களில் நம்மை ஊக்குவிக்கும் விஷயம் என்னவென்றால், எஸ்தரும் என் அப்பாவும் ஆண்டவர்மீது விசுவாசம் வைப்பதைத் தேர்ந்தெடுத்தார்கள், ஆண்டவருடைய மகத்தான அழைப்பை தங்கள் சொந்த வாழ்க்கைக்கும் மேலாக மதித்தார்கள். பவுல் தனது கடிதங்களில் எழுதியதைப் போலவே அவர்கள் வாழ்ந்தனர். அதை இங்கே வாசிக்கலாம்:
"நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்." (பிலிப்பியர் 1:20-21, 23-24)
நீங்கள் ஆண்டவரைக் குறித்து அறிவிக்க பயமின்றி செயல்பட விரும்பினால், என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுங்கள்: “பரலோகத் தகப்பனே, எஸ்தர் மற்றும் பவுலைப் போலவே, நானும் என் வாழ்க்கையை உமது திட்டம் நிறைவேற ஒப்புக்கொடுக்கிறேன். ராஜ்யத்தைப் பின்தொடர்வதிலும், சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதிலும் நான் பயமின்றி காணப்பட உதவுவீராக. என் வாழ்வு உமக்கே சொந்தம் என்பதை ஒப்புக்கொண்டு, அதை உமது கரங்களில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது நம்மை பயத்திலிருந்து வெளியேறி விசுவாசம் நிறைந்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மற்றும் தேவனுடைய வாக்குத்தங்களின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கையை எப்படி மேம்படுத்துவது? என்பதை பற்றியும் இங்கே நாம் தெளிவாக காணலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-faith-vs-fear
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

இளைப்பாறுதலைக் காணுதல்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

மன்னிப்பு என்பது ...

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

மனஅழுத்தம்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்
