விசுவாசம் vs பயம்மாதிரி

விசுவாசம் vs பயம்

7 ல் 7 நாள்

பயம் மற்றும் விசுவாசத்தை ஒரே நேரத்தில் உங்கள் வாழ்வில் உணர்ந்ததுண்டா?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, ஆண்டவர் என்னை முழுநேர ஊழியத்திற்கு அழைத்ததை நான் உணர்ந்தேன். அந்த நேரத்தில், நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பாடலாசிரியராகவும், ஆராதனை குழுவின் தலைவராகவும் இருந்து வந்தேன், இருப்பினும் நான் எப்போதும் என் முழுநேர வேலையையும் ஊழியத்தையும் சமநிலைப்படுத்தியே செய்து வந்தேன்.

முழுநேர ஊழியத்தைச் செய்ய வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தபோதிலும், எனக்கும் சில தடைகள் இருந்தது. ஒன்று, நானும் ஜெனியும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தோம், மாதச் சம்பளத்துக்கான நிச்சயம் இன்றி, எங்கள் புத்தம் புதிய குடும்ப வாழ்வு ஒரு கடினமான தொடக்கத்திற்குள் தள்ளப்படும் என்று நான் பயந்தேன்.

ஆனால் ஆண்டவர் என் இதயத்தின் கயிறுகளை இழுப்பதை உணர்ந்தேன், அதனால் நான் விசுவாசம் எனும் அடியை எடுத்துவைக்க முடிவு செய்தேன், மேலும் "உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்" என்ற வசனத்தை நம்பினேன். (1 தெசலோனிக்கேயர் 5:24)

நமக்கு வசதியாக இருக்கும் ஒரு சூழலை விட்டுவிட்டு, அதற்கு வெளியே வந்து ஏதாவது செய்யும்படி ஆண்டவர் நம்மைக் கேட்கும்போது, விசுவாசமும் பயமும் ஒன்றையொன்று சந்திக்கிறது.

"படிக்கட்டுகள் அனைத்தையும் உங்களால் பார்க்க முடியாதபோதும், முதல் அடியை எடுத்து வைப்பதுதான் விசுவாசம்." - மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்.

இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர ஆண்டவர் மோசேயை அழைத்தபோது (யாத்திராகமம் 3), நான் செய்ததைப் போலவே மோசேயும் செய்தார். அவர் தனக்குள் இருந்த எல்லா பயங்களையும் பட்டியலிடத் தொடங்கினார்: "நான் அவர்களுக்கு என்ன சொல்ல முடியும்?" "அவர்கள் என்னை நம்பவில்லை என்றால் என்ன செய்வது?" "நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்" என்றார். இறுதியில் விசுவாசிக்க முடிவு செய்தார், அதன் பின்னர் உள்ள வரலாறு எழுதப்பட்டுள்ளது.

பயமானது "அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது" என்று கூறுகிறது. விசுவாசமானது "இருந்தாலும் பரவாயில்லை" என்று கூறுகிறது.

"இருந்தாலும் பரவாயில்லை" என்ற சொற்றொடர், சிலையை வணங்க மறுத்ததற்காக அக்கினி சூளைக்குள் தூக்கி எறியப்பட இருந்த சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோருக்குள் காணப்பட்ட விசுவாசத்திற்கு ஒரு சக்திவாய்ந்த உதாரணம். (தானியேல் 3). அவர்கள், "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை" என்றார்கள்.

இன்று உங்களுக்கு வசதியாக இருக்கும் சூழலிலிருந்து வெளியே வரும்படி ஆண்டவர் உங்களை அழைக்கிறாரா?

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

விசுவாசம் vs பயம்

இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது நம்மை பயத்திலிருந்து வெளியேறி விசுவாசம் நிறைந்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மற்றும் தேவனுடைய வாக்குத்தங்களின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கையை எப்படி மேம்படுத்துவது? என்பதை பற்றியும் இங்கே நாம் தெளிவாக காணலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-faith-vs-fear