விசுவாசம் vs பயம்மாதிரி

நீங்கள் எப்போதாவது மரணத்துக்கு அஞ்சி இருக்கிறீர்களா? 💀
உங்களது மிகப்பெரிய பயம் என்ன?
பலருக்கும், வாழ்க்கையில் அவர்களது மிகப்பெரிய பயமே மரண பயம்தான். தாங்கள் மரித்த பிறகு என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மைதான் இதற்கு காரணமாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, கிறிஸ்தவர்களாகிய நமக்கு என்ன நடக்கும் என்பது தெரியும்! நமக்கு ஒரு பெரிய எதிர்கால நம்பிக்கை உண்டு: நமது பூமிக்குரிய சரீரங்கள் அழிந்த பிறகு, நாம் இயேசுவோடு கூட நித்தியத்தை செலவிடுவோம்.
"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (யோவான் 5:24)
இந்த வாக்குத்தத்தத்துக்கான திறவுகோல் மிக எளிமையானது - விசுவாசியுங்கள். இயேசு உங்களுக்காக மரித்தார் என்பதையும், உங்கள் பாவங்களிலிருந்து உங்களை இரட்சிக்க சிலுவையின் மீதான அவரது பலி போதுமானது என்பதையும் விசுவாசியுங்கள்.
"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." (ரோமர் 6:23)
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." (ரோமர் 5:8-9)
இயேசுவை விசுவாசிப்பது என்பது ஜீவன் மீதான விசுவாசத்தால் மரண பயத்தை மாற்றிக்கொள்வதாகும் (யோவான் 14 :6)
நீங்கள் மரித்த பிறகு எங்கு செல்கிறீர்கள் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா?
ரோமர் 10:9-10 கூறுகிறது: "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்."
இதுவரை இயேசுவின் மீதான உங்கள் விசுவாசத்தை நீங்கள் அறிக்கையிடவில்லை என்றால், இது உங்களுக்கான தருணமாக இருக்கட்டும்! இந்த ஜெபத்தை ஏறெடுங்கள்: “கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையில் நீர் எனக்குத் தேவை. நான் ஒரு பாவி என்பதையும், எனக்கு உமது மன்னிப்பு தேவை என்பதையும் நான் அறிவேன். நீர் தேவனுடைய குமாரன் என்றும், என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தவர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். என் பாவங்களைச் சுமந்ததற்கு நன்றி, நித்திய ஜீவனாகிய பரிசை நான் நன்றியுடன் பெற்றுக்கொள்கிறேன். என் இதயத்தில் வாரும், என் வாழ்க்கையை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
வாழ்த்துக்கள் 🥳, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முடிவை எடுத்துள்ளீர்கள்!
இப்படி ஒரு ஜெபத்தை நீங்கள் ஏறெடுப்பது இதுவே முதன்முறை என்றால், தயவுசெய்து எனக்கு ஒரு செய்தி அனுப்பவும். உங்கள் புதிய விசுவாச பயணத்தைத் தொடங்க நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன்!
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது நம்மை பயத்திலிருந்து வெளியேறி விசுவாசம் நிறைந்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மற்றும் தேவனுடைய வாக்குத்தங்களின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கையை எப்படி மேம்படுத்துவது? என்பதை பற்றியும் இங்கே நாம் தெளிவாக காணலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-faith-vs-fear
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

இளைப்பாறுதலைக் காணுதல்

மனஅழுத்தம்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

தனிமையும் அமைதியும்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

மன்னிப்பு என்பது ...

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்
