உண்மைக் கர்த்தர் மாதிரி
கர்த்தர் இறையாண்மையுள்ளவர்
கர்த்தர் நல்லவர். ஆனால் நம்முடைய சூழ்நிலைகளின் மீது வல்லமை இல்லாத ஒரு நல்ல கர்த்தர் மீது நமக்கு அதிகம் விசுவாசம் வருவதில்லை. அண்டசராசரங்களையும் ஆட்சி செய்கின்ற ஒரு நல்ல கர்த்தர் இருக்கிறார். அவரைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
நம் கர்த்தர் அனைத்துக்கும் மேலானவர், எல்லாம் உருவாகும் முன்பே இருப்பவர், அனைத்தையும் காக்கிறவர்.
அது தான் அவரை இறையாண்மை உள்ளவராக்குகிறது. இதற்கு பொருள்என்ன?
இறையாண்மையுடன் இருத்தல் என்றால் கர்த்தர் பல கடவுள்களுக்குள் ஒருவர் அல்ல. அவர் கர்த்தாதி கர்த்தர், ராஜாதி ராஜா, அனைத்து வல்லமைகளுக்கும் அதிகாரங்களுக்கு மேலான உன்னத வல்லமை உள்ளவர். அரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கீழ்ப்பட்டவர் அல்ல அவர். விதியின் சதி அவரை ஒன்றும் செய்ய முடியாது. உலகங்களின் விதிகள் அவரைக் கட்டுப்படுத்தாது. அவர் தான் உலகங்களின் சட்டமாக இருக்கிறார்.
“நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லை…” (ஏசாயா 44:6).
இதை நீங்கள் புரிந்து கொள்ளும் போது, நீங்கள் அவரை முழுமையாகநம்பலாம் என்பதை அறிந்து கொள்கிறீர்கள்.
· அவரது வாக்குத்தத்தங்கள் வெறு வார்த்தைகள் அல்ல என்று நம்பலாம்.
· உங்கள் ஜெபங்களைக் கேட்டு அவற்றின் மீது செயலாற்றும் வல்லமை அவருக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
· உங்களது எதிர்காலத்தை அவர் தனது கைகளில் வைத்திருக்கிறார் என்றஉறுதியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
· நம் ஆராதனைக்கு அவர் பாத்திரமானவர் என்று உறுதியாகத் தெரிந்ததால்அவரை நீங்கள் தொழுது கொள்ளலாம்.
· கைவிடப்படுவோமோ என்ற பயம் இல்லாமல் அவரைக் கர்த்தர் என்று பின்பற்றலாம்.
· அவரது ஞானம், அன்பு மற்றும் ஆற்றலின் பாதுகாப்பில் நீங்கள் வாழலாம்.
இறையாண்மை என்ற சொல்லானது குறிப்பாக பிரியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மையான கர்த்தரை அனைத்துக்கும் மேலான கர்த்தராகப் பார்த்தல் என்பது உங்கள் விசுவாசத்துக்கு அசைக்க முடியாத ஒரு அஸ்திபாரத்தைக் கொடுக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/