உண்மைக் கர்த்தர் மாதிரி

உண்மைக் கர்த்தர்

7 ல் 5 நாள்

கர்த்தர் நீதியுள்ளவர்

“ஏன்?” பிரச்சனைகளின் நேரங்களில் கர்த்தர் இந்தக் கேள்விக்குப் பதில் கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவர் மிகவும் அரிதாகவே பதில் கொடுக்கின்றார். வாழ்க்கை ஏன் அநியாயமாக இருக்கிறது, நல்லவர்களுக்கு ஏன் கெட்டவைகள் நடக்கின்றன, தீமை ஏன் உலகத்தில் இருக்கிறது என்ற கேள்விகளுடனேயே நாம் இருக்க வைக்கிறார். 

விசுவாசத்துடன் கீழ்ப்படிந்தவர்களுக்கு ஏன் பலன் அளிக்காமல் இருக்கிறார், ஏன் வாழ்க்கை முழுவதுமான கனவு நனவாகும் முன் அதை கலைத்துப் போடுகிறார்?  இளம்  வயதிலேயே நாம் நேசிக்கின்றவர்கள் இறந்து போக அனுமதிக்கிறார்? கர்த்தர் இறையாண்மை உள்ளவராகவும் நல்லவராகவும் இருந்தால், உலகம் ஏன் இப்போது இருக்கின்றது போல இருக்கின்றது? 

இது இவ்வாறாக இருக்கக் காரணம், நமக்கு மிகவும் குறைவான பார்வையேஇருக்கின்றது. நாம் அதிகமான அநியாயத்தைக் காண்கிறோம். அது உண்மைதான். ஆனால் நாம் காணும் காட்சியானது முழுமையானது அல்ல. அந்தக் காட்சியானது நிலையற்றது. கர்த்தரின் மாபெரும் திட்டங்கள், நோக்கங்கள் போன்ற மாபெரும் சித்திரமானது நமது புரிதலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்றது. 

“என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர்” (சங்கீதம் 89:4).

உண்மையான கர்த்தர் நித்தியகாலமாக நல்லவராக, இறையாண்மை உள்ளவராக, பரிசுத்தராக, நீதியுள்ளவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

கர்த்தர், தான் ஒரு நீதியுள்ள நியாயாதிபதி என்பதையும் இரக்கமுள்ளவர் என்பதையும் அவர் நிரூபித்திருக்கிறார்.  நியாயமாக நமக்கு வரவேண்டிய தண்டனையை அவர் தனது சொந்தக் குமாரனாகிய இயேசுவின் மீது வைத்து, நம் மீது நீதி விழுந்து தண்டிக்காமல் செய்திருக்கிறார்.

இப்போது நிலைமை எப்படியாகத் தோன்றினாலும் கர்த்தர் நீதியுள்ளவர் என்பதை நிரூபித்திருக்கிறார், இன்னும் நிரூபித்துக் கொண்டே இருப்பார் என்ற உண்மையில் ஆறுதலைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் “சர்வலோகநியாயாதிபதி” (ஆதியாகமம் 18:25). இறுதியில் அவர் அனைத்தையும்சரியாக்குவார்.

அதே நேரத்தில் நாம் அவரது சாயலில் ஆறுதல் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் இந்த உலகத்தின் அநீதிகளை எதிர்த்துப் போராட வேண்டும். பழிவாங்குதலைத் தவிர்க்க வேண்டும். வெறுப்பையும் கசப்பையும் எதிர்க்க வேண்டும். வரப்போகும் இறுதி நியாயத்தீர்ப்பைப் பற்றி பிறரை எச்சரிக்க வேண்டும். அனைவரையும் கர்த்தரி இரக்கத்துக்கு நேராகசுட்டிக் காட்ட வேண்டும். நமது நீதியுள்ள கர்த்தர் எப்போதுமே நம்மைக்கவனித்துக் கொண்டிருக்கிறார். நமது நிலையை அறிந்திருக்கிறார்.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

உண்மைக் கர்த்தர்

நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/