உண்மைக் கர்த்தர் மாதிரி
கர்த்தர் உண்மையுள்ளவர்
நம்பிக்கை ஆன்மாவின் மூச்சுக்காற்று என்று சொல்லப்படுகிறது. நமக்காக ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். சூழ்நிலைகள் மாறும் என்று நம்ப வேண்டும். கனவுகள் உண்மையிலேயே நனவாக முடியும் என்று விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் நமக்காக நன்மையானவைகளை வைத்திருக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.
நம்பிக்கை இல்லாமல், நம்மை உட்புறமாக எதுவும் தாங்கிப்பிடிக்க முடியாது. நாம் நம்பிக்கை இழந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, வாடிப் போய்விடுவோம்.
கர்த்தரின் உண்மைத்தன்மையே நம் நம்பிக்கையின் அஸ்திபாரம் ஆகும்.
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எரேமியாவைப் போல, நாம் நமது சூழ்நிலைகளையும் தாண்டிப் பார்க்கலாம். கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதை விசுவாசிக்கலாம். எருசலேம் இடிந்து கிடப்பதைப் பார்த்த எரேமியா, கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் உடைந்து போனதாகத் தோன்றினாலும் கர்த்தரின் மாறாத குணத்தை நம்பினார்.
கர்த்தர் எந்த அளவுக்கு உண்மையுள்ளவர், நம்பத்தகுந்தவர் என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது, நாம் பல சூழ்நிலைகளைச் சகிக்க முடியும். சுகவீனம், பொருளாதார சிக்கல், குடும்பத்தில் குழப்பம், அழுத்தம், தனிமை உணர்வு, வாழ்க்கையின் பாடுகள் - இவை அனைத்தின் நடுவிலும் கர்த்தரின் உண்மைத் தன்மை நம்பிக்கையைக் கொடுக்க முடியும். அவரது அன்பான மனதுருக்கமானது ஒரு போதும் முடிவடைவதில்லை.
“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்குமுடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மைபெரிதாயிருக்கிறது.” (புலம்பல் 3:22-23).
முடிவில்லாத மகிழ்ச்சியும் சமாதானமும் உள்ள வாழ்க்கையின் இரகசியம் இது தான்.
· சர்வ வல்லமையுள்ள, முழுவதும் அன்புள்ள, ஞானமுள்ள கர்த்தர் எல்லா நேரங்களிலும் நமக்காக இருக்கிறார். அவர் நமக்கு ஆற்றலையும் விடுதலையையும் தருவார்.
· இது நம்மைப் பயத்திலிருந்து விடுவித்து, தொடர்ந்து செல்ல ஊக்கம் தருகின்றது. சாத்தியங்களை தரிசனங்களாகப் பார்க்க உதவுகிறது.
· சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாகத் தோன்றினாலும், அவரதுஉண்மைத்தன்மைக்கு எதிரானதாகத் தெரிந்தாலும், அவர் நம்மைக் கைவிடவில்லை என்று நாம் அறிந்திருக்கிறோம்.
இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உண்மையுள்ள ஒரு கர்த்தரை நம்புவதற்குமட்டுமல்ல, நம்பிக்கை தேவையாக இருக்கும் உலகத்துக்கு அவரைஅறிவிக்கவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நல்லவராக, இறையாண்மைஉள்ளவராக, பரிசுத்தமானவராக, நீதியுள்ளவராக, அன்புள்ளவராக, உண்மைத்தன்மையுள்ளவராக இருக்கும் கர்த்தர், அனைத்து வகையான பாவங்களிலிருந்து விடுதலையைத் தருவதாக வாக்களிக்கிறார். அனைத்து நட்டங்களிலும் இருந்து புது வாழ்க்கையைத் தருவதாகச் சொல்கிறார். நம்பிக்கையற்ற நிலையில் ஆசீர்வாதத்தைக் கொடுக்கக் காத்திருக்கிறார். இவரே அனைத்து நம்பிக்கைகளையும் கொடுக்கும் உண்மைக் கர்த்தராக இருக்கிறார். அவர் ஒரு போதும் உங்களைக் கைவிட மாட்டார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/