உண்மைக் கர்த்தர் மாதிரி
கர்த்தர் ஞானமுள்ளவர்
நல்லவராக, இறையாண்மையுள்ளவராக, பரிசுத்தராக இருப்பதுடன், உண்மையான கர்த்தர் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையில் எந்த வித்தியாசத்தைக் கொடுக்க முடியும்?
நான் இறையியல் கல்லூரியில் இருக்கும் போது எனக்கு மிகவும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வாழ முயற்சி செய்து கொண்டிருந்தாலும் எனது திருமணம், வேலை, படிப்பு மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய எதிர்மறையான கண்ணோட்டமே எனக்கு இருந்தது.
அப்போது ஒரு பேராசிரியர் இவ்வாறு சொன்னார், “மிகச் சிறந்த விளைவுகளை, மிகச் சிறந்த வழிகளில், மிக அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு, நீண்ட காலத்துக்குக் கொண்டுவருவார் என்பதைக் கர்த்தரது ஞானம் நமக்குச் சொல்கிறது.”
கர்த்தரின் ஞானம் தான் என் வாழ்வின் சூழ்நிலைகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இது எனக்கு உதவியது. நான் எதிர்ப்பைக் கைவிட்டு அவரே எனது விசுவாசத்தை வடிவமைக்க அனுமதித்தேன்.
நம் வாழ்வில் இருக்கும் ஒவ்வொன்றும் கர்த்தரின் ஞானமுள்ள திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். அவரது நன்மையும், இறையாண்மையும், நேசமும் உள்ள குணத்தின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் இருக்கும்.
படைப்பு, வேதம், அவரது குமாரன், அவரது கொடைகள், மீட்பின் திட்டம், அவருடனான நமது அனுபவங்கள் போன்றவற்றின் மூலமாகக் கர்த்தர் தனது ஞானத்தை வெளிப்படுத்துகிறார். விசுவாசத்தில் அவரிடம் கேட்பதின் மூலம் அவரது ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார். (யாக்கோபு 1:5-6).
இந்த உண்மையை நாம் பிடித்துக் கொள்ளும் போது, நமது சூழ்நிலைகளில் அவரது ஞானத்தை நாம் கண்டு கொள்ள முடியும்.
· நமது கண்ணோடமானது விரிவாகின்றது, நம் விசுவாசம் ஆழமாகின்றது,நமது குணங்கள் உறுதி பெறுகின்றன.
· நமது அழுத்தங்கள், பயங்கள், கவலைகள் மங்கத் துவங்குகின்றன.
· கர்த்தர் அனைத்தையும் பரிபூரணமான விதத்தில் பார்க்கிறார், நம் வாழ்வில் தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறார் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
· நம் வாழ்வில் இருக்கும் மறைமுகமான அம்சங்களை அதுஅகற்றிவிடுவதில்லை, ஆனால் நாம் கர்த்தரின் திட்டங்களின் மூலம் சமாதானத்தை அனுபவிக்கிறோம்.
“ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம்எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” (ரோமர் 11:33).
இன்று உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் உண்மையான கர்த்தரின்தெய்வீக ஞானத்தில் தான் அஸ்திபாரமிடப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவரை நம்பி, அவர் உங்கள் வாழ்வில் செய்கின்றவற்றுடன் ஒத்துழைப்பதன் மூலமாக, உங்கள் வாழ்க்கை மாற்ற பெறும்.
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/