உண்மைக் கர்த்தர் மாதிரி
கர்த்தர் அன்புள்ளவர்
அனைவருமே அன்பையே தேடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான அன்பைத் தேடுகிறார்கள். தற்காலிகமான உணர்வை அல்ல. நாம் அன்புக்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம். நாம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறோம். அக்கறை காட்டப்படுகிறோம், மன்னிக்கப்பட்டிருக்கிறோம், ஆதரிக்கப்பட்டிருக்கிறோம். புகழப்பட்டிருக்கிறோம். ஏன்? நாம் கர்த்தரால் படைக்கப்பட்டிருக்கிறோம், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
(1 யோவான் 4:8, 16).
நாம் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கர்த்தரின் அன்பானது மிகவும் தீவிரமானதாக இருப்பதால், அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வல்லமையான ஜெபத்தைச் செய்திருக்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் “கிறிஸ்துவினுடையஅன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும் …” (எபேசியர்3:18-19) மாற வேண்டும் என்று அவர் ஜெபிக்கிறார்.
அன்பு என்பது உலகம் எங்கும் இருக்கும் ஒரு தேவையாகும். கர்த்தரின் அன்பே அந்த உலகளாவிய பதிலாகவும் இருக்கின்றது.
· உலகத்தின் அன்பைப் போல அல்லாமல், கர்த்தரின் அன்புநிபந்தனையற்றது.
· நாம் நல்லவர்களாக இருக்கும் போதும், கெட்டவர்களாக இருக்கும் போதும் அவர் நம் மீது கனிவுடன் இருக்கிறார்.
· வாழ்வும் நன்மையும் நம் வாழ்வில் நிறைந்து வழிய வேண்டும் என்று அவர்விரும்புகிறார்.
· நம் வாழ்வில் இருந்து மற்றவர்களுக்கும் வழிந்து ஓடும் அளவுக்கு அவரது அன்பானது நமக்குள் நிறைந்திருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறார்.
உண்மைக் கர்த்தரை அறிந்து கொள்வதே உங்கள் நோக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலமாக அவரது அன்பு உங்களில் நிறைந்து வழியட்டும். அவரது அன்பைத் தியானித்து அது உங்கள் இதயத்தை ஆட்சி செய்ய அனுமதியுங்கள். கர்த்தர் உங்களைப் பார்க்கின்றது போல உங்களைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவரது அன்பில் நீங்கள் பாதுகாப்பாக உணருங்கள்.
உங்கள் இதயம் மறுரூபமாக அனுமதிப்பீர்களா? கர்த்தரின் அன்பு உங்களுக்குள் மட்டுமல்ல, உங்கள் மூலமாகவும் பாய்ந்து செல்ல அனுமதிப்பீர்களா? அது இந்த உலகத்தை மாற்றும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/