தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 59 நாள்

ஊழல்

ஒரு பிரபல ஊழியர் தனது பாவம் ஒன்றினால் ஊழியத்தின் பல பொறுப்புகளிலிருந்து பதவி விலகினார். அவரது பாவத்துக்கு முன்பாக அவரிடம் கேள்வி கேட்ட ஒரு நண்பரைப் பற்றி அவர் நினைவுபடுத்திச் சொன்னார். என் நண்பர் சாத்தான் உங்களைத் தாக்கினால் எப்படி எங்கே தாக்குவான் என்று தெரியுமா என்று கேட்டாராம். அதற்கு ஊழியர் எப்படி இருந்தாலும் என் வாழ்வின் உறவுகள் பகுதியில் சாத்தானால் என்னைத் தாக்க முடியாது என்று பதில் சொல்லியிருந்தார். ஆனால் சிறிது சிறிதாக அவர் அதே பாவத்தில் விழுந்துவிட்டார். நான் எதில் உறுதியாக இருப்பதாக நினைத்தேனோ அதிலேயே பலகீனமாகி விழுந்துவிட்டேன் என்று சொன்ன அவர், என்னைப் போல பலர் தங்கள் வாழ்க்கையில் உடைந்து போய் இருக்கிறார்கள். எங்களது தவறுக்குப் பின்பு எங்களுக்கு மீண்டும் வாழ்க்கை உண்டா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என் பதில் ஆம் என்பது தான். அது தான் கிருபை. அற்புதமான, மன்னிக்கின்ற, குணமாக்குகின்ற கிருபையானது அனைத்தும் புதிதாகச் செய்கிறது. பாவத்திலிருந்து தப்பிக்கும் வழி இயேசு தான். மன்னிப்பின் ஊற்று இயேசு தான். உடைந்த வாழ்க்கைகளை சரி செய்து மீண்டும் நமது கால்களை நிற்கச் செய்யும் வல்லமை இயேசுவிடம் தான் இருக்கின்றது. அழிவிலிருந்து நம்மைப் பாதுகாப்பவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்று அவர் சொன்னார்.

தாவீதும் இதே கருத்தைத் தனது வாழ்வின் அனுபவங்களிலிருந்து உணர்ந்து சொல்கிறார். நமது பாவங்கள் அக்கிரமங்களுக்கு ஏற்றபடி தண்டனை கொடுத்தால் நம்மால் தாங்கவே முடியாது.

சிந்தனை : பாவிகளுக்குத் தண்டனை தருவது நீதி. அவர்களுக்கு பதவி தருவது ஊழல் போலத் தெரிகின்றது. அது தான் தெய்வீக கிருபை.

ஜெபம் : ஆண்டவரே உமது கிருபையைப் புரிந்து அனுபவிக்கவும், உம்மிடம் அதிக நெருக்கமாக வாழவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.

நாள் 58நாள் 60

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org