தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
எக்ஸ்சேஞ்ச்
நமக்கு நியாயம் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் நான் ஒரு பலிகாடாவாகிவிட்டேன் என்று நினைப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். பிரிட்டிஷ் அறிஞர்களின் ஆராய்ச்சி ஒன்றில், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று நினைத்த்வர்களில் 55 சதவீதம் பேருக்கு பத்து வருடத்திற்குள் மாரடைப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புக்கள் இருக்கின்றனவாம். மற்றவர்களுக்கு இருதய சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றனவாம். இப்படிப்பட்ட எண்ணங்கள் அதிக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனவாம். தமனிகளை சுருங்கச் செய்து மாரடைப்பு சம்பந்தமான மற்ற பிரச்சனைகளையும் தருகின்றனவாம். இப்படிப்பட்ட கசப்பான உணர்வு உள்ளவர்கள் போதைப் பொருட்கள், சிகரட், மது மற்றும் அதிகமாக உணவு உண்ணுதல் ஆகிய பழக்கங்களையும் நாடிச் செல்ல வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றனவாம். இவைகளும் நமது ஆரோக்கியத்தைக் கெடுப்பவைகளாகவே இருக்கின்றன.
நாம் நேர்மையாக இருந்தும் தீமை கிடைக்கிறது என்றால் தாவீதின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. “நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது. உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.” அவருக்கும் மனதில் வேதனைகள் இருந்தன. உபவாசத்தில் தனது வேதனைகளைக் கொட்டிவிடுகிறார். ஆனாலும் அவர் மனம் ஒடிந்து போகவில்லை. அவர் எதிர்காலத்தில் கடவுள் செய்யவிருக்கும் நன்மைகளையும் அவற்றை அவர் பாடப் போகிறதைப் பற்றியும் நினைக்கிறார், “கர்த்தரை நான் என் வாயில் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.” பாடுகளின் நடுவே அநீதியின் நடுவே துதித்தலைப் பற்றி நினைப்பது முட்டாள்த்தனமாகத் தெரியலாம். ஆனால் அது ஞானமுள்ள செயல். ஏனென்றால் கடவுள் துதிகளுக்குப் பாத்திரர். அவர் துதிகளில் பிரியப்படுகிறார். துதித்தலில் வல்லமை இருக்கின்றது.
சிந்தனை : துதி நமக்கு விடுதலை தரும் ஒரு மந்திரம் அல்ல. விடுதலை தரும் ஆண்டவருக்குப் பிரியமானது.
ஜெபம் : என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம் பண்ணும். உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org