பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 4 நாள்

ஜெபிப்பது என்பது தெரிந்தெடுத்த வார்த்தைகளில் இல்லை. நமதுஇருதயத்தின் நிலையைப் பொறுத்தத்து. பெற்றுக்கொள்ளும் விசுவாசம் என்பது - எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என தெரிவிப்பது இல்லை; மாறாக, நமது விருப்பங்களை தேவனது சித்தத்துடன் ஒன்றிணைத்து பூரணமாக அவரில் நம்பிக்கையாக இருப்பது. இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது: இது எனக்கு இப்பொழுதே வேண்டும் என நிர்ணயித்துக்கொள்வதால் - அது அந்த பொழுதில் கிடைக்காவிட்டால் சோர்ந்து போகிறோம். ஆனால், நாம் வேதாகம வாக்கியங்களில் - விசுவாசத்தில் நடந்தவர்களின் வாழ்க்கையை வாசிக்கும் போது– தேவனுடைய வேளை, நோக்கம் தான் – எப்பொழுதும் சரியான வேளையாக, நோக்கமாகத்தான் இருக்கும் என்பதை கற்றுக்கொள்கிறோம். ஜெபம் என்பது சூழ்நிலைகளை மாற்றும் அதேவேளையில் நம்மை / நம்முடைய குணாதிசயத்தையும் மாற்றும்.

இத்தருணத்தில் தான்- தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என்ற வாக்கியத்தின் அர்த்தம் நமக்கு புரிகின்றது.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d