பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

ஆபிரகாமுக்கு நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி... என்பது கொடுக்கப்பட்ட வாக்குதத்தம். ஆனாலும் அவனுக்கு பிள்ளையில்லாதிருந்தது. இடையில் ஆபிரகாம் விரக்தியில் காரியத்தை தன் சொந்த வழியில்,சுயமுயற்சியில் சாதித்து விட வேண்டும் என நினைத்து செயல்பட்டார். ஆனாலும், தேவன் தாம் நியமித்திருந்த காலத்தில் தாம் உண்மையுள்ளவர்-சொன்னதை நிறைவேற்றுபவர் என்பதை வெளிப்படுத்தினார். இதில் இருந்து நாம் கற்றுக் கொளள வேண்டிய பாடம்: நாம் ஜெபித்து -பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்த காத்திருக்கும் வேளையில் தேவன் நமது விசுவாசத்தை புடமிடுகிறார்; நம்முடைய குணாதிசயங்களை வனைகின்றார். மேலும் நாம் பூரணமாக அவரைச் சார்ந்து கொள்ள நமக்கு கற்றுக்கொடுக்கிறார். இதுதான் ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்த போது நேர்ந்தது....தேவனுடைய பதில்கள் தேவனின்வேளை - அவருடைய வேளைகளில் (TIMINGS) நிறைவேறின. ஆபிரகாம் நினைத்த வேளையில் நிறைவேறவில்லை. நிறைவேறினபோது அது முழுமையானதாகவும் அழகானதாகவும் இருந்தது...வரலாறு புரட்டிப் போடப்பட்டது. அசாத்தியமான அற்புதங்கள் / திறவா கதவுகள் எப்போது திறக்கும் என்பதே நம் முன் நிற்கும் கேள்வி. பதில்:
அவருடைய கால அட்டவணையின்படியும் - நாம் அவரால் ஆயத்தம் செய்யப்பட்டவர்களாக இருக்கும் போதும்– மூடிய கதவு திறக்கும், ஆசீர்வாதம் நம்கைகளில் வந்து சேரும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

மனஅழுத்தம்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

விசுவாசம் vs பயம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்
