மீட்பு மாதிரி

மீட்பு

7 ல் 1 நாள்

தேவன் மீட்க வருகிறார்

ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த நேரம் அது. தங்கள் சிருஷ்டிகருடனான மாபெரும் உறவு,ஜீவனும்,சுவாசமுமுள்ள அனைத்தின் மீதான அதிகாரம்,தங்களைச் சுற்றியிருந்த அப்பழுக்கற்ற அழகு மற்றும் உடை வாங்கும் செலவின்மை என்று வாழ்க்கை அற்புதமாக இருந்தது. பாவம்,வெட்கம்,எதிர்மறை எண்ணங்கள்,பயம் போன்ற தடைகள் இல்லை. அப்படி ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். அது பரிபூரணமான ஒரு ஆனந்தக் காட்சி. ஆனால்,விதைக்கப்பட்ட ஒரு சந்தேகம்,நம்பப்பட்ட ஒரு பொய்,மற்றும் மாற்றவே முடியாத ஒரு கீழ்ப்படிதலால் இவை அனைத்தும் ஒரு நொடியில் மாறிவிட்டன. எல்லாமே பறிபோனது போல இருந்தது – மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருந்த தடையற்ற,அந்நியோன்ய உறவு முறிந்தது மற்றும் பரிபூரணமாக இருந்த உலகம் சிதைந்து,மாசுபட்டதாகத் தோன்றியது. என்னவொரு சோக முடிவு – எல்லாமே தொலைந்து போனது. ஆனால்,பரிபூரணமான ஒரு பெற்றோரைப் போன்ற தேவன் கொண்டிருந்த திட்டம் உடனே நடைமுறைக்கு வந்தது. அவர் அந்த மனிதனையும்,மனுஷியையும் மிருகத்தோல் ஆடையால் உடுத்துவித்தார். அதனால் அவர்களுடைய அவமானம் மாறியது,பின்னர் அவர் அவர்களை ஏதேன் தோட்டத்திற்கு வெளியே இருந்த உலகத்திற்கு அனுப்பினார்.

தேவன் மனிதர்களை அவர்களுடைய பாவங்களின் விளைவுகளில் இருந்து மீட்டுக்கொள்ள வகுத்த பல திட்டங்களில் இது முதலாவது என்று சொல்லப்படவில்லை என்றாலும்,உண்மை அதுதான். தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் உடை கொடுக்க, ஒரு மிருகத்தை பலியிட்டு,அதன் இரத்தத்தைச் சிந்த வேண்டியதாக இருந்திருக்கும். இந்த இரத்தபலி முதன்முறையாக செலுத்தப்பட்டது,இதுவே பின்னர் மனிதனின் பாவத்திற்குப் பரிகாரமாக மோசேயினால் முறையான ஒரு நியமமாக ஏற்படுத்தப்பட்டது. தேவன் அவர்களை ஏதேனிலிருந்து அனுப்பி வைத்ததன் மூலம் பெரிய தயவு செய்தார் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் மட்டும் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்தால்,தேவன் தடை செய்திருந்த ஜீவ விருட்சத்தின் கனியையும் புசித்து,சாகா வரமும் பெற்றிருப்பார்கள். நமக்கு வயதாகியும் மரிக்காமலே இருந்து விடுவதை நினைத்துப் பாருங்கள்! பூமியிலேயே நரகத்தை அனுபவித்திருப்போம். தேவன் தம் மேலான தயவினால் மரணம் என்னும் ஈவை நமக்குக் கொடுத்தார்,அது பூமியின் துக்கங்களிலிருந்து நமக்கு இனிமையான விடுதலை கொடுத்து,வேதனையற்றதும்,சந்தோஷம் நிறைந்ததுமான பரலோக நம்பிக்கைக்கு நேராக நடத்துகிறது.

இன்று, நாம் ஏதேனைப் போன்ற ஒரு பரிபூரணமான நிலையில் வாழ முடியாமல் இருக்கலாம். உண்மையில்,நாம் யுத்தத்தினாலும்,பஞ்சத்தினாலும்,சோகத்தினாலும் தொய்ந்துபோன ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதாமையும் ஏவாளையும் மீட்ட தேவன்தாமே தம்முடைய எல்லையற்றதும்,குறைவற்றதுமான தம் அன்பினாலும்,தயவினாலும் தம் குமாரர்களையும்,குமாரத்திகளையும் தொடர்ந்து மீட்டு வருகிறார்.

சிந்தனைக்கு:

தேவனால் ஆதாமையும் ஏவாளையும் அவர்களின் இருண்ட சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றால்,உங்களையும் அவரால் மீட்டெடுக்க முடியும்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பு

கிறிஸ்மஸ் - நம்மை மீட்க கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம். இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள், உங்கள் மீட்பின் அனுபவத்தை நினைவுகூர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் பாதையில் கடந்து செல்ல வேண்டிய அனைத்திலிருந்தும் அவர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaranக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/