மீட்பு மாதிரி

மீட்பு

7 ல் 5 நாள்

இயேசு கிறிஸ்துவே மீட்பு

இதுவரை இருந்ததும்,இப்போது இருப்பதும்,எப்போதுமே இருக்கப்போவதுமான பிரச்சனை பாவமே. பிரச்சனை ஒருபோதும் தேவனிடத்திலோ,அவருடைய வார்த்தையிலோ இல்லை. அவர் தம் மக்களுக்கு வாக்குப்பண்ணின ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் சகல விதங்களிலும் மாறாதவராகவும்,பரிசுத்தராகவும்,நீதியுள்ளவராகவும் இருக்கிறார். பாவமே தேவனையும் மனிதனையும் பிரித்து வைத்தது. இதற்கான “ஒரே” தீர்வு,இதுவரை வாழ்ந்த மற்றும் இனி வாழப்போகிற ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும்,சிறுபிள்ளைக்கும் பதிலாக பழுதற்ற, பூரணமான ஒரு பலி செலுத்தப்படுவதாகும். தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவே அந்த பலி. அவர் சகல விதங்களிலும் தேவனாக இருந்தும்,மனிதனாக வந்து,யூதேயா தேசத்தின் கரடுமுரடான பாதைகளில் நடந்து,மக்களைச் சந்தித்தார்,சிறுபிள்ளைகளைத் தூக்கியெடுத்தார்,தீண்டத்தகாதவர்களைத் தொட்டார்,மற்றும் பூமியின் அச்சிறு பகுதிக்கு பரலோகத்தையே கொண்டு வந்துவிட்டார். அவருடைய முப்பத்து மூன்றாவது வயது வரை சாதாரணமாக இருந்த அவரது வாழ்க்கையில், கடைசி மூன்று ஆண்டுகள் மக்களுக்கு ஊழியம் செய்து போதித்த பின்,வினோதமான ஒரு திருப்பம் ஏற்பட்டது. பொய்யாகப் புனைக்கப்பட்ட குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார்,எருசலேமின் வீதிகளில் ஒரு குற்றவாளியைப் போல அழைத்துச் செல்லப்பட்டார்,மற்றும் அவரை ஒரு மலையின் மீது ஏறச் செய்து,அங்கு அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். சிதைந்து போய் இரத்தம் சிந்தின அவரது சரீரம் மதத்தலைவர்களின் வெறுப்பு மற்றும் போர்ச்சேவகரின் கோபத்தின் தாக்குதல்களைச் சகித்தது. சிலுவையில் தொங்கிய அவர் உலகத்தின் பாவப் பளுவைச் சுமந்து,பிதாவுக்குத் தம்மையே பாவநிவாரண பலியாக ஒப்புவித்தார். அவர் முற்றிலும் பாவமற்றவராக இருந்ததால் அவரால் தம் மரணத்தின் மூலம் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரம் செலுத்த முடிந்தது,அவருக்கு நன்றி. அந்தத் தருணத்தில்தான் மனிதன் எந்தப் பாவத்தின் தடையும் இல்லாமல் மீண்டும் தேவனை அணுகுவது சாத்தியமாயிற்று. அவருடைய இரத்தத்தினால்தான் நம் மீட்பு சாத்தியமாயிற்று. அத்துடன் அது முடியவில்லை. அவர் மரித்து இரண்டு நாட்களுக்குப் பின்னர்,அவருடைய நிறைவான வல்லமை வெளிப்பட்டது,இயேசு மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார்;என்றென்றைக்குமாக மரணத்தை உறுதியாக வென்றார். இன்று,நாம் மரண பயம் இல்லாமலும்,நித்திய வாழ்வின் நம்பிக்கையுடனும் சுதந்திரமாக வாழலாம்,அவர் உயிரோடு எழுந்ததற்காக நன்றி. நம்முடைய மீட்பு இயேசுவால் நிறைவு செய்யப்பட்டது. எந்தவொரு நியாயாதிபதியோ,அதிபதியோ,தீர்க்கதரிசியோ அல்லது ஆசாரியரோ சாதிக்க முடியாத ஒன்றை இயேசு தம் தன்னிகரற்ற பலியினால் சாதித்தார்!

சிந்தனைக்கு:

நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கான ஒரே நாமம் இயேசு கிறிஸ்துவே!

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பு

கிறிஸ்மஸ் - நம்மை மீட்க கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம். இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள், உங்கள் மீட்பின் அனுபவத்தை நினைவுகூர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் பாதையில் கடந்து செல்ல வேண்டிய அனைத்திலிருந்தும் அவர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaranக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/